ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த பொருட்களை ஏலம் விட நடவடிக்கை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த பொருட்களை ஏலம் விட நடவடிக்கை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

போயஸ்கார்டன் - ஜெயலலிதா

போயஸ்கார்டன் - ஜெயலலிதா

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், காலணிகள் மற்றும் பிற பொருட்களை பொது ஏலம் விட, சிறப்பு வழக்கறிஞரை அரசு நியமித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Bangalore, India

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சேலை, கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவற்றை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து விலைமதிப்புமிக்க சேலைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஏராளமான பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக 11,344 சேலைகள், 750 காலணிகள், 1040 வீடியோ கேசட்கள் என பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கின் விசாரணை கர்நாடகத்தில் நடைபெற்றதால், ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்ற பொருட்கள் அனைத்தும், கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டன.

நீதிபதி உத்தரவு

இந்நிலையில், அந்த பொருட்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் நரசிம்மமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம், அரசு வழக்கறிஞரை நியமித்து, ஜெயலலிதாவின் உடைமைகளை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

First published:

Tags: Bangalore, Jayalalitha, Sasikala