ஹோம் /நியூஸ் /இந்தியா /

Video | ஃபோட்டோ எடுத்த தொண்டரை விரட்டி விரட்டி கொலை வெறியுடன் தாக்கிய பாலகிருஷ்ணா!

Video | ஃபோட்டோ எடுத்த தொண்டரை விரட்டி விரட்டி கொலை வெறியுடன் தாக்கிய பாலகிருஷ்ணா!

தொண்டரை தாக்கும் பாலகிருஷ்ணா

தொண்டரை தாக்கும் பாலகிருஷ்ணா

பாலகிருஷ்ணா இதுபோல செயல்படுவது முதல்முறை இல்லை. சமீபத்தில், தன்னை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளரை கொன்று விடுவேன் என்று மிரட்டி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது நெருங்கி வந்து ஃபோட்டோ எடுத்த தொண்டரை, நடிகர் பாலகிருஷ்ணா விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஆந்திர பிரதேசத்தில் ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. மாநில சட்டமன்றத்துக்கும் அன்றய தினமே தேர்தல் நடக்கிறது.

  ஆட்சியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள கடும் முயற்சி எடுத்து வருகின்றது. நடிகரும் அரசியல்வாதியுமான பாலகிருஷ்ணா ஹிண்டூர் தொகுதியில் அக்கட்சி சார்பில் சட்டமன்றத்துக்கு போட்டியிடுகிறார்.

  படிக்க... வைகோ நல்ல மனிதர்... ஆனால் - ஓ.பி.எஸ்

  விஜயநகரம் பகுதியில் அவர் இன்று பிரசாரம் செய்தார். பிரசார வாகனத்தில் அவர் இருந்த போது கட்சித்தொண்டர் ஒருவர் வாகனத்தை நெருங்கி வந்து பாலகிருஷ்ணாவை ஃபோட்டோ எடுத்தார்.

  இதனால், ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணா வாகனத்தில் இருந்தவாரே செல்போனை தட்டிவிட முயற்சி செய்தார். அதில், வெற்றி பெறாததால் ஆத்திரத்துடன் கீழே இறங்கிய அவர், அந்த தொண்டரை விரட்டி விரட்டி தாக்கினார். பின்னர், வெறி கொண்டு அவரின் செல்போனை பிடுங்கி தொலைவில் வீசினார். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  பாலகிருஷ்ணா இதுபோல செயல்படுவது முதல்முறை இல்லை. சமீபத்தில், தன்னை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளரை கொன்று விடுவேன் என்று மிரட்டி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  மேற்கண்ட வீடியோவை ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

  Also See..


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Sankar
  First published:

  Tags: Andhra Pradesh Lok Sabha Elections 2019, Elections 2019, Lok Sabha Election 2019