"ராணுவத்தை அரசியலாக்குவது தவிர்க்கப்பட வேண்டும்" - இந்திய விமானப் படை அதிகாரி பேச்சு

”நாம் எத்தனைப் பதில் தாக்குதல்கள் நடத்தினாலும் பாகிஸ்தானே முன்வந்து தனது குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர வேறேதும் செய்ய முடியாது”.

Web Desk | news18
Updated: April 1, 2019, 5:00 PM IST
விமானப்படை அதிகாரிகள்
Web Desk | news18
Updated: April 1, 2019, 5:00 PM IST
”ராணுவத்தை அரசியலாக்குவது தவிர்க்கப்பட வேண்டும்” என இந்திய விமானப் படை முன்னாள் தளபதி கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

நியூஸ் 18 அஜெண்டா இந்தியா மாநாட்டில் இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதி எஸ்.கிருஷ்ணசாமி மற்றும் முன்னாள் ஜெனரல் டி.எஸ்.ஹூடா ஆகியோர் ராணுவம் குறித்தத் தலையீடுகளில் அரசியலாக்கம் கூடாது எனப் பேசினர்.

கிருஷ்ணசாமி கூறுகையில், “ராணுவத்தை அரசியலாக்கம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். ராணுவத்தை அரசியலைவிட்டுத் தள்ளிவைக்க வேண்டும்.

ராணுவ வீரர்கள் மற்றும் யூனிஃபார்ம் பணிகளில் இருக்கும் எங்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் குறைவு. ராணுவச் சட்டதிட்டத்தின் கீழ் நாங்கள் இருப்போம். நாங்கள் சொல்ல நினைப்பதை சொல்ல முடியாது, சொல்லவும் மாட்டோம்.

அதற்காக எங்களைத் தூண்டாதீர்கள். சந்தோஷம் இல்லாத கூட்டம் நாங்கள் இல்லை. இதனால் ராணுவத்தை அரசியலுக்குள் தள்ளாதீர்கள்” என்றார்.

முன்னாள் ராணுவ ஜெனரல் ஹூடா பேசுகையில், “ராணுவம் அரசியல் பேச்சுகளில் மையமாகிவிட்டது. பாலகோட் தாக்குதலுக்குப் பின்னர் ராணுவம் அரசியலாக்கப்படுவதில் எனக்கொன்றும் ஆச்சர்யமில்லை.

நாம் எத்தனைப் பதில் தாக்குதல்கள் நடத்தினாலும் பாகிஸ்தானே முன்வந்து தனது குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர வேறேதும் செய்ய முடியாது” எனப் பேசினார்.
Loading...தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

மேலும் பார்க்க: #EXCLUSIVE: மத்தியில் பாஜக அரசு மாறினால் தமிழக அரசு கலைந்துவிடும் - ப.சிதம்பரம்
First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...