நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்- வீடுகளில் சிறப்பு தொழுகை

நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. மசூதிகள் திறக்கப்படாத பகுதிகளில் மக்கள் வீடுகளிலேயே தொழுகை செய்தனர்.

  • Share this:
இறைத்தூதர் இப்ராஹீமின் தியாக வாழ்க்கையை நினைவு கூறும் விதமாக இஸ்லாமியர்களைால் கொண்டாடபடுவது பண்டிகை பக்ரீத். வழக்கமாக பள்ளி வாசல்களில் அதிகாலை சிறப்புத் தொழுகையுடன் பக்ரீத் கொண்டாட்டம் தொடங்கும். கொரோனா காரணமாக பல இடங்களில் பள்ளிவாசல் திறப்பிற்கு தடை இருப்பதால் வீடுகளிலேயே இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

கோவையில் ஆடு, மாடுகளை குர்பானி கொடுத்து மக்கள் பக்ரீத் பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடினர். கூட்டுத் தொழுகை, பொது இடங்களில் இறைச்சி வெட்டுதல் போன்றவை தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் தெருவில் மக்கள் ஒன்று கூடி பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அவரவர் வீடுகளிலும், மொட்டை மாடிகளிலும் தங்கள் உறவினர்களுடன் சமூக இடைவெளியை பின்பற்றி சிறப்பு தொழுதனர்.


புதுச்சேரியில் சிறப்புத் தொழுகைக்காக பள்ளிவாசல்கள் காலை திறக்கப்பட்டன. மசூதிக்கு வருபவர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டதுடன், அவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களும் சேகரிக்கப்பட்டன.

டெல்லியில் ஜும்மா மசூதி திறக்கப்பட்டதால் தொழுகைக்காக பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்தனர். தனிமனித இடைவெளியை கடைபிடித்த அவர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். கொரோனா அச்சம் காரணமாக இந்த முறை கைகுலுக்கவோ, ஆரத்தழுவி வாழ்த்து சொல்லவோ அனுமதிக்கப்படவில்லை.இதேபோல் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மசூதிகளில் ஒன்று கூடிய இஸ்லாமியர்கள், அரசின் விதிகளை பின்பற்றி தொழுகி நடத்தி ப்க்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading