• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நீங்கள் இந்துக்கள் ஏன் அவர்களுடன் சேர்கிறீர்கள்?- மாணவர்களைத் தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்

நீங்கள் இந்துக்கள் ஏன் அவர்களுடன் சேர்கிறீர்கள்?- மாணவர்களைத் தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்

சம்பவம் நடந்த இடத்தில்...

சம்பவம் நடந்த இடத்தில்...

முஸ்லிம் நண்பர்களுடன் பயணித்த மாணவர்களைத் தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர் 5 பேரை மங்களூரு போலீஸார் கைது செய்தனர்.

  • Share this:
    கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பு படிக்கும் 4 ஆம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மல்பே கடற்கரைக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது வழிமறித்த பஜ்ரங்தளம் அமைப்பினர் காரில் உள்ள மாணவர்களின் பெயரைக் கேட்டு மிரட்டினர்.

    அப்போது காரில் 2 முஸ்லிம்கள் இருந்ததால் இந்துக்களாகிய நீங்கள் ஏன் இவர்களுடன் சேர்கிறீர்கள் என்று கேட்டு மற்ற மாணவர்களைத் தாக்கினர் பஜ்ரங் தள் அமைப்பினர். இந்தச் சம்பவத்தை பஜ்ரந்த் தள் அமைப்பினரே செல்போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பி பெருமை பேசியிருக்கின்றனர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்த மங்களூரு மாநகர காவல் ஆணையர் என்.சசிகுமார் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

    இதனையடுத்து பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த 5 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 323, 341, மற்றும் 504-ம் பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்கள் கொடுத்த புகாரில், மாணவரும் இவரது ஒரு பெண் மற்றும் ஆண் நண்பருடன் மனிபால், மால்பே சென்று விட்டு திரும்பி வந்தனர் என்றும் அப்போது 4 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து தங்கள் காரை வழிமறித்தனர் என்றும் பிறகு எங்கள் பெயர் அடையாளம் ஆகியவற்றைக் கேட்டு தாக்கத் தொடங்கினர் என்றும் புகார் அளித்தனர்.

    ஆனால் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பினர் என்ன கூறுகின்றனர் என்றால், 5 பேர் மீதும் போலீசார் சாதாரண வழக்குகளைப் பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர் என்று குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் அவரக்ளை மீண்டும் கைது செய்ய வேண்டும் என்று அங்கு டி.ஒய்.எஃப்.ஐ தரப்பில் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

    மேலும் டி.ஒய்.எஃப்.ஐ குற்றம்சாட்டும்போது, பாஜகவும் பஜ்ரங் தளும் வேலையில்லாத இளைஞர்களை இப்படி அடக்குமுறைக்காக பயன்படுத்துகின்றனர். இந்த மாவட்டத்தில் இத்தகைய அடக்குமுறை, மணல் திருட்டு மாஃபியா, மற்றும் பிற ரவுடியிசம் வளர்ந்து வருவதாக இந்த அமைப்பினர் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: