ஹோம் /நியூஸ் /இந்தியா /

கார், ஆட்டோவைத்தொடர்ந்து பிரஷர் குக்கரில் வெடிகுண்டு... சதி தாக்குதலை முறியடித்த பாதுகாப்பு படையினர்!

கார், ஆட்டோவைத்தொடர்ந்து பிரஷர் குக்கரில் வெடிகுண்டு... சதி தாக்குதலை முறியடித்த பாதுகாப்பு படையினர்!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்

ஜம்மு காஷ்மீரில் பிரஷர் குக்கரில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அதை பாதுகாப்பு படையினர் செயலிழக்க செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Jammu and Kashmir, India

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள உள்ள இமாம்சாஹிப் பகுதியில் பிரஷர் குக்கரில் வெடிகுண்டு தாக்குதல் தடுக்கப்பட்டது.

உளவுத்துறை தகவலின் படி சோபியான் காவல்துறையும் 44 ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினரும் இணைந்து கூட்டு சோதனை நடத்தினர். இதில் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள இமாம்சாஹிப் பகுதியில் மினி வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது.

அதை சோதனையிட்ட போது, அதில் சந்தேகத்திற்குரிய விதமான பை ஒன்று தென்பட்டது. அதற்குள் பிரஷர் குக்கர் வைக்கப்பட்டு, அந்த குக்கரில் IED வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. உடனடியாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளித்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர். இதன் மூலம் பெரிய தாக்குதல் சம்பவம் ஒன்று தடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாம்போர் ரயில் நிலையத்திற்கு எதிரே பிரஷர் குக்கரில் IED வெடிகுண்டு வைக்கப்பட்ட நிலையில், இந்த சதிச்செயலை சிஆர்பிஎப் வீரர்கள் கண்டறிந்து முறியடித்தனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் ஆட்டோ ஒன்றில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இது தொடர்பாக ஆட்டோவில் பயணம் செய்த ஷாரிக் என்பவர் கைது செய்யப்பட்டு கர்நாடக மாநில போலீஸாரால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இதற்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், இவ்வழக்கை தேசிய புலனாய்வு விசாரணைக்கு மாற்ற கர்நாடக அரசு பரிந்துரைத்தது. இது போன்ற தொடர் சம்பவங்களை கருத்தில் கொண்டு மத்திய மாநில உளவு பிரிவுகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டு, பாதுகாப்பு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

First published:

Tags: Bomb, Jammu and Kashmir