ஹோம் /நியூஸ் /இந்தியா /

BadlaavHumse Hai: இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களைக் கௌரவிப்பதற்கான Network18 மற்றும் AU Small Finance Bank முன்முயற்சி.. இன்று மாலை நேரலையில்

BadlaavHumse Hai: இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களைக் கௌரவிப்பதற்கான Network18 மற்றும் AU Small Finance Bank முன்முயற்சி.. இன்று மாலை நேரலையில்

Badlaav Humse Hai

Badlaav Humse Hai

BadlaavHumse Hai : இந்தியாவின் கிராமப்புறங்களில் மாற்றங்களை ஏற்படுத்துபவர்களின் கதைகளை முன்னிலைப்படுத்தி, முக்கியமான பிரச்சனைகளில் கவனத்தை ஈர்க்கும் முயற்சி

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Mumbai, India

Network18 மற்றும் AU Small Finance Bank முன்முயற்சிகளுள் ஒன்றான BadlaavHumse Hai, சீர்மிக்க மனிதாபிமான சேவையை நோக்கி புதிய பாதையில் பயணித்து, தனிநபர்களின் வாழ்விலும் இந்தியாவின் பல சமூகங்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய இருபது தொலைநோக்கு பார்வைகொண்ட நபர்களின் பயணங்களைக் காட்சிப்படுத்துகிறது.

ஆறு மாத காலஅளவில், இந்த குழுக்கள் நாட்டின் பல்வேறு மூலைகளுக்குச் சென்று, சமூகத்தின் அதிகம் பாதிக்கப்பிற்குள்ளாகக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவத்துவதற்காக இடைவிடாது உழைத்த மாற்றங்களை ஏற்படுத்துபவர்களின் கதைகளைக் கேட்டறிந்துள்ளது.

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரையிலும்; சுயமான, நிலையான முன்முயற்சிகள் மூலம் மக்களை மேம்படுத்துவதற்கான இலவச மருத்துவ உதவிகளை வழங்குதல் என, பிரச்சாரம் சமூகத்தில் நிலவும் மிகவும் முக்கியமான சில சமூகப் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது.

இந்த வெளித்தெரியாத நாயகர்களின் பாராட்டுக்குரிய பங்களிப்பைக் கொண்டாடவும், கௌரவிக்கவும், அங்கீகரிக்கவும், டிசம்பர் 16, 2022 அன்று BKC மும்பையில் உள்ள டிரைடென்ட்டில் ஒரு இறுதி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டத் தருணத்தில் மராட்டிய முதல்வரான மாண்புமிகு திரு. ஏக்நாத் ஷிண்டே, மராட்டிய அரசின் சுற்றுலா, திறன் மற்றும் தொழில்முனைவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரான மாண்புமிகு திரு. மங்கள் பிரபாத் லோதா, Infosys நிறுவனத்தின் நிறுவனரான திரு. நாராயணன் K மூர்த்தி, குறிப்பிடத்தக்க சமூக சேவகர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான திரு. கைலாஷ் சத்யார்த்தி, நடிகர் தியா மிர்சா என இந்தியாவின் பல முக்கிய அரசியல், தொழில் மற்றும் சமூகநலத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள்.

' isDesktop="true" id="856712" youtubeid="dJuhdoFNXSE" category="national">

மக்கள் அனைவருக்கும் நிலையான மற்றும் ஒருங்கிணைந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக உறுதிபூண்டுள்ள சில தலைசிறந்த தலைவர்களை ஒன்றிணைத்து, இந்த மாற்றத்தை ஏற்படுத்துபவர்களை அவர்களின் முயற்சிகளைத் தொடர ஊக்குவிப்பதையும், அவர்களைப் பாராட்டுவதையும் இந்த நிகழ்வு இறுதி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இறுதித் தருணத்தை நெருங்கும் இந்த வேளையில் எண்ணங்களைச் சுருக்கமாக நினைவுகோருகிறோம் என, AU Small Finance Bank செயல் இயக்குநரான திரு. உத்தம் திப்ரேவால் கூறினார்.“நம் நாட்டில் வங்கிச் சேவை வழங்கப்படும் விதத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவதே AU Small Finance Bank அடிப்படைத் தத்துவமாகும். எங்கள் தயாரிப்பு, சேவைகள் மற்றும் சலுகைகள் மூலம், நாடு முழுவதுமுள்ள 3.3 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இந்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம்.

இந்த முன்முயற்சியானது, இந்த மாற்றத்தை ஏற்படுத்துபவர்களுடன் தொடர்புகொள்வதன் மூலம், அதே தத்துவத்தின் விரிவாக்கமாகச் செயல்படுகிறது. சமூகம் முழுவதும் வலுவான, நேர்மறையான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தை உண்டாக்கும் இத்தகைய தனிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்துபவர்களை நாம் கண்டறிந்து கொண்டாட வேண்டிய நேரம் இது." இந்த முன்முயற்சிக்கான தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்காக திரு. உத்தம் திப்ரேவால் அவர்கள் Network18 க்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Network 18, பிராண்டட் கன்டென்ட்டின் COO திரு. S சிவக்குமார் அவர்கள் பிரச்சாரம் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்; "இந்தியாவின் கிராமப்புறங்களில் மாற்றங்களை ஏற்படுத்துபவர்களின் கதைகளை முன்னிலைப்படுத்தி, முக்கியமான பிரச்சனைகளில் கவனத்தை ஈர்க்கும் இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக Network18 பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் முன்முயற்சிகள் முக்கியமான பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், அதற்காக செயல்பட ஊக்கமளிப்பதிலும் கவனம் செலுத்துகின்றன. சிறிய செயல்களில் கூட ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை அடையாளம் கண்டு மாற்றங்களை ஏற்படுத்துபவர்களை ஊக்குவிப்பதும் உத்வேகம் அளிப்பதுமே எங்கள் குறிக்கோளாகும்."

மாற்றத்தை ஏற்படுத்துபவர்களைக் கொண்டாட டிசம்பர் 16, 2022 அன்று மாலை 6:30 மணிக்கு சமூக ஊடக சேனல்களில் இந்த நிகழ்வின் நேரலை ஸ்ட்ரீமிங்கைப் பார்க்கவும், சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஆவலை வலுப்படுத்தவும், ஆதரவற்றவர்களை மேம்படுத்தவும், தொடர்ந்து செயல்பட சபதம் செய்வோம்.

AU Small Finance Bank அறிமுகம்:

AU Small Finance Bank லிமிடெட் (AU SFB) என்பது அட்டவணைப்படுத்தப்பட்ட கமர்ஷியல் பேங்க் ஆகும், இது பார்ச்சூன் இந்தியா 500 நிறுவனங்களுள் ஒன்று, அத்துடன் நாட்டின் மிகப்பெரிய Small Finance Bank (SFB) ஆகும்.  ராஜஸ்தானின் கிராமப்பகுதிகளிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, இன்று AU SFB கிராமப்புற மற்றும் புற நகர பகுதி சந்தைகளைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுள்ள, வலுவான வணிக மாதிரியை உருவாக்குவதற்கு உதவும் மிகப்பெரிய ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்காக உருமாறியுள்ளது. சில்லறை வணிகத்தில் கவனம் செலுத்தக்கூடிய, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிறுவனமாக 27 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியத்தைக் கொண்ட AU தனது வங்கிச் செயல்பாடுகளை 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்  தொடங்கியது, அத்துடன் 20 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 33.3 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றும் அதே வேளையில், 1,000 வங்கிகளில் 28,677 பணியாளர்களுடன் தனது செயல்பாடுகளை நிறுவியுள்ளது.  செப்டம்பர் 30, 2022 நிலவரப்படி, பேங்கில் பங்குதாரர்களின் நிதி ₹10,114 கோடியாகவும், வைப்புத் தொகை ₹58,335 கோடியாகவும் மொத்த முன்பணம் ₹52,452 கோடியாகவும் உள்ளது.  AU பேங்க் மார்கியூ முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதுடன் NSE மற்று BSE ஆகிய இரண்டு முன்னணி பங்குச் சந்தைகளிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. CRISIL, CARE Ratings மற்றும் India Ratings போன்ற அனைத்து முக்கிய ரேட்டிங் ஏஜென்சிகளிடமிருந்தும் அதிக வெளிப்புறக் கிரெடிட் மதிப்பீட்டைத் தொடர்ந்து பராமரித்து வருகிறது

First published:

Tags: India, Maharashtra, Mumbai, Tamil News