ஹோம் /நியூஸ் /இந்தியா /

கடைகளில் இனி 1, 2 சிகரெட் எல்லாம் வாங்க முடியாது - மத்திய அரசு விரைவில் புதிய உத்தரவு

கடைகளில் இனி 1, 2 சிகரெட் எல்லாம் வாங்க முடியாது - மத்திய அரசு விரைவில் புதிய உத்தரவு

காட்சிப் படம்

காட்சிப் படம்

அதிகப்படியான புகையிலை பயன்படுத்துவது மற்றும் மதுபானம் ஆகியவை புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்தை அதிகரிக்கிறது என்ற காரணத்திற்காகத்தான் இந்த முடிவை எடுப்பதாக ஸ்டாண்டிங் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிகரெட் பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று எவ்வளவு கூறினாலும் புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அதை அவ்வளவு எளிதில் விட முடியாது. ஏற்கனவே சிகரெட் பிடிப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி பலவிதமான பிரச்சாரங்கள் மற்றும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இதற்கு மற்றொரு தீர்வாக அரசாங்கம் விரைவில் சிகரெட் விற்பனையில் புதிய மாற்றத்தை அமல்படுத்த இருக்கிறது. அதாவது இனி நீங்கள் ஒற்றை சிகரெட்டை அது 1 அல்லது 2 சிகரெட்டை மட்டும் தனியாக வாங்க முடியாது என்ற புதிய வரைமுறையை அமல்படுத்த இருக்கிறது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை குறைக்கும் ஒரு முயற்சியாக இதை மேற்கொள்வதாக பாராளுமன்றத்தின் குழுவினர் அறிவித்துள்ளனர் என்று பல்வேறு அறிக்கைகள் வெளியாகி இருக்கின்றன. சிகரெட்டுகளை பாக்கெட்டுகளாக மட்டுமல்லாமல் ஒற்றை சிகரெட்டுகள் ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரசாங்கம் விரைவில் ஒற்றை சிகரெட் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்ய இருப்பதாக பாராளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிக்கை வெளியாகி இருக்கிறது.

புகையிலைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கு எவ்வளவு பிரச்சாரங்கள் மற்றும் விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தனியே விற்கப்படும் சிகரெட்டுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே, இதைக் குறைக்கும் முயற்சியில் , பாராளுமன்றத்தின் ஸ்டாண்டிங் கமிட்டி விவாதத்தை மேற்கொண்டுள்ளது. அதை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ஸ்மோக்கிங் சோனை நீக்க வேண்டும் என்ற முடிவையும் பரிசீலனை செய்ய இருப்பதாக கூறியுள்ளது.

இளைஞர்கள் சிகரெட் பிடிக்க வாழ்நாள் தடை - அரசு அதிரடி சட்டம்

ஸ்டாண்டிங் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அரசு அதன்படி நடக்க முடிவெடுத்தால், விற்பனை மட்டுமல்லாமல் ஒற்றை சிகரெட்டின் உற்பத்திக்கும் முழுமையாக தடை விதிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரையின்படி ஈ-சிகரெட்டுகள் விற்பனையை மத்திய அரசாங்கம் தடை செய்துள்ளது என்பதையும் நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும்.

அதிகப்படியான புகையிலை பயன்படுத்துவது மற்றும் மதுபானம் ஆகியவை புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்தை அதிகரிக்கிறது என்ற காரணத்திற்காகத்தான் இந்த முடிவை எடுப்பதாக ஸ்டாண்டிங் கமிட்டி குறிப்பிட்டுள்ளது. புகையிலைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்திய பின்பு கூட புகையிலை விற்பனை குறையவில்லை.

தற்போதைய ஜிஎஸ்டி அட்டவணையின்படி பீடிக்களுக்கு 22% ஜிஎஸ்டி வரியும், சிகரெட்டுகளுக்கு 53% ஜிஎஸ்டி வரியும், ஸ்மோக் இல்லாத புகையிலை பொருட்களுக்கு 64 சதவீத ஜிஎஸ்டி வரியும் தற்போது அமலில் உள்ளது. அது மட்டும் இல்லாமல் மற்ற ஏற்கனவே ஜிஎஸ்டி வரிகள் அதிகமாக இருக்கும் சூழலில், இந்திய அரசாங்கத்திடம் உலக சுகாதார மையம் அனைத்து புகையிலை பொருட்களுக்குமே 75% ஜிஎஸ்டி வரி விதிக்க கோரியிருக்கிறது.ஒவ்வொரு ஆண்டுமே புகையிலை மற்றும் சிகரட் பழக்கத்தால் மட்டுமே 3 லட்சம் நபர்கள் இறக்கிறார்கள் என்றும், 46% நபர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள் மற்றும் 16% கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்பழக்கம் இல்லாத ஒரு உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற புகையிலை எதிர்ப்பு அமைப்பு வழங்கிய அறிக்கையின்படி இந்தியாவில் கிட்டத்தட்ட 6.6 கோடி மக்கள் சிகரெட் பிடிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 26 கோடி மக்களுக்கு புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் 21% நபர்களுக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. ஏற்கனவே பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக்கூடாது என்பதை தீவிரமாக எல்லா இடங்களும் பின்பற்றும் வரும் நிலையில் அதைத் தொடர்ந்து புகையிலை பொருட்களுக்கான விளம்பரங்களும் தடை செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது ஒற்றை சிகரெட்டுகள் விற்பனை தடை விதிக்கப்படலாம் என்பது புகையிலை பொருட்கள் பழக்கத்தை வெகுவாக குறைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

First published:

Tags: E Cigarettes, Health, India