• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாஜக ஆதரவுடன் துணை சபாநாயகராகும் சமாஜ்வாதி எம்.எல்.ஏ - பாஜக ஆடும் சதுரங்கம்!

பாஜக ஆதரவுடன் துணை சபாநாயகராகும் சமாஜ்வாதி எம்.எல்.ஏ - பாஜக ஆடும் சதுரங்கம்!

samajwadi party

samajwadi party

403 இடங்களை கொண்ட உ.பி சட்டமன்றத்தில் பாஜகவுக்கு 304 உறுப்பினர்களும், சமாஜ்வாதி கட்சிக்கு 49 உறுப்பினர்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 16 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்களும் உள்ளனர்.

  • Share this:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் துணை சபாநாயகர் பொறுப்புக்கு நிதின் அகர்வால் என்ற சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏவை பாஜக ஆதரித்துள்ளது. பாஜக பெரும்பான்மையுடன் இருப்பதால், பாஜக ஆதரவளிக்கும் வேட்பாளர் விரைவில் துணை சபாநாயகர் ஆக தேர்வாகி விடுவார். ஆனால் இதற்கு சமாஜ்வாதி கட்சி தனது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. ஏன் என குழம்புகிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

14 ஆண்டுகளுக்கு பின் உத்தரப்பிரதேசத்தில் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற இருக்கிறது. பொதுவாக இந்த பதவி சட்டமன்றத்தின் பிரதான எதிர்கட்சிக்கே அளிக்கப்படும். அடுத்த வாரம் இதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இதனிடையே, சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏவான நிதின் அகர்வால் தனது தந்தை முன்னிலையில் துணை சபாநாயகர் தேர்தலுக்கான வேட்புமனுவை சபாநாயகரிடம் தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திரா தேவ் ஆகியோர் உடனிருந்தனர். ஆனால் நிதின் அகர்வால் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வருபவர் என்பதால் இந்த நடவடிக்கைக்கு சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், பாஜக அனைத்துவகையிலான சட்டமன்ற மரபுகளையும் பின்பற்றியிருக்கிறது. துணை சபாநாயகர் பதவி எதிர்கட்சிக்குரியது. உங்களால் ஒரு வேட்பாளரை தரமுடியவில்லை. தானே முன்வந்து ஒருவர் வேட்பு மனுதாக்கல் செய்கிறார். அவருக்கு பாஜக பக்கபலமாக இருக்கிறது. நாங்கள் சட்டமன்ற மரபுகளுக்கு உரிய மரியாதை தருகிறோம் என்றார் அவர்.

Also read: சமோசாவுக்காக அடிதடியில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் – வீடியோ!

நிதின் அகர்வாலின் தந்தையும் முன்னாள் அமைச்சருமான நரேஷ் அகர்வால் அப்போது உடனிருந்தார். அவர் 2018ம் ஆண்டு பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

வேட்புமனு தாக்கல் நிகழ்வுக்கு பிறகு நிதின் அகர்வால் கூறுகையில், நான் பாஜகவின் உறுப்பினர் கிடையாது என அவர் விளக்கம் அளித்தார்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், பாஜக ஆதரவு தரும் இந்த வேட்பாளர் எந்த கட்சியைச் சேர்ந்தவர்? ஏற்கனவே முடிந்து போன திட்டங்களை தொடங்கி வைப்பவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என அவர் தெரிவித்தார்.

Also read: ’போலீஸ்’ நண்பருடன் கள்ளக்காதல்… வாழ்க்கையை தொலைத்த இளம்பெண்

உத்தரப்பிரதேசத்தில் கடைசியாக 2004ம் ஆண்டு துணை சபாநாயகராக இருந்தவர் பாஜகவின் ராஜேஷ் அகர்வால், இவர் போட்டியில்லாமல் தேர்வானவர்.

403 இடங்களை கொண்ட உ.பி சட்டமன்றத்தில் பாஜகவுக்கு 304 உறுப்பினர்களும், சமாஜ்வாதி கட்சிக்கு 49 உறுப்பினர்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 16 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்களும் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: