ஹோம் /நியூஸ் /இந்தியா /

அளவுக்கதிகமாக மது குடித்துவிட்டு மயங்கிய தாய்.. இரவு முழுவதும் பசியால் துடித்து இறந்த பச்சிளம் குழந்தை..

அளவுக்கதிகமாக மது குடித்துவிட்டு மயங்கிய தாய்.. இரவு முழுவதும் பசியால் துடித்து இறந்த பச்சிளம் குழந்தை..

போதைக்கு அடிமையான பெண்ணின் கணவர் கடந்த வெள்ளிக்கிழமை வணிகம் தொடர்பான சில வேலைகளுக்காக வெளியூருக்கு கிளம்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போதைக்கு அடிமையான பெண்ணின் கணவர் கடந்த வெள்ளிக்கிழமை வணிகம் தொடர்பான சில வேலைகளுக்காக வெளியூருக்கு கிளம்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போதைக்கு அடிமையான பெண்ணின் கணவர் கடந்த வெள்ளிக்கிழமை வணிகம் தொடர்பான சில வேலைகளுக்காக வெளியூருக்கு கிளம்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சத்தீஸ்கரில் தாயின் கவனக்குறைவால் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய் உணவளிக்க மறந்துவிட்டதால் குழந்தை பசி காரணமாக இறந்தது என்று போலீசார் கடந்த வியாழக்கிழமை (ஏப்.1) தகவல் அளித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்கஞ்ச் வார்டு பகுதியில் இந்த சோக சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மோட்டார் மெக்கானிக்கின் மனைவியான தாய், பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையை கவனித்துக்கொள்ளத் தவறியவர் ஆகும், அதற்கு காரணம் அவர் அவரது குடிப்பழக்கம் தான் என்றும் கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்த குழந்தை அந்த தம்பதியரின் முதல் குழந்தை ஆகும்.

போதைக்கு அடிமையான அந்தப் பெண்ணினுடைய கணவர் கடந்த வெள்ளிக்கிழமை வணிகம் தொடர்பான சில வேலைகளுக்காக வெளியூருக்கு கிளம்பியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த பெண் மாலையில் மது அருந்தத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், இரவு வரை அப்பெண் குடித்துக் கொண்டே இருந்ததாகவும், பின்னர் நிதானத்தை முற்றிலும் இழந்ததாகவும் கூறப்படுகிறது. குழந்தையோ இரவு முழுவதும் பசியால் அழுது கொண்டே இருந்துள்ளது. ஆனால் அடுத்தநாள் காலை குழந்தையின் சத்தம் கேட்கவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து பார்க்க முடிவு செய்தனர்.

அந்த பெண்ணின் ஆல்கஹால் பழக்கத்தைப் பற்றி அறிந்திருந்த அக்கம்பக்கத்தினர் சிலர், அவரது வீட்டில் நுழைந்துள்ளனர். அங்கு குழந்தை பேச்சு மூச்சி இல்லாமல் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின்படி, வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது குழந்தையின் தாய் மதுபோதையிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து பக்கத்து வீட்டு நபர்கள் போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது தொடர்பான விசாரணையை நடத்தி வந்துள்ளனர். அந்தப் பெண் மது போதையில் இருந்ததாகவும், அவர் சரியாகப் பேசும் நிலையில் கூட இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க... தமிழகம், புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும்... வெப்பச் சலனத்தால் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்...

இந்த வழக்கில் தம்தாரி போலீசார் இன்னும் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதயத்தை உருக்கும் சம்பவத்தால் தம்தாரி சுந்தர்கஞ்ச் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஒரு தாயின் கவனக்குறைவால் பச்சிளம் குழந்தையின் உயிர் பிரிந்தது. மதுபோதையால் ஏற்படும் பல துரதிஷ்டவசமான சம்பவங்களில் இது நெஞ்சை பதற வைக்கும் ஒன்றாக உள்ளது. இன்றைய நவீன உலகத்தில் உணவு முறையாலும், வாழ்க்கை முறைகளாலும் திருமணத்திற்கு பிறகு குழந்தை இல்லாமல் எண்ணற்ற தம்பதியினர் கஷ்டப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இதுபோன்ற அலட்சியம், கவனக்குறைவு, தகாத உறவு காரணமாக பல குழந்தைகளின் வாழ்க்கை பிறந்த சில மாதங்களிலேயே முடிவடையும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Vaijayanthi S
First published:

Tags: Alcohol, Chhattisgarh