அதே கண்ணாடி, கழுத்தில் மஃப்லர், பொறுத்தமான மீசை... இணையத்தில் வைரலாகும் பேபி கெஜ்ரிவால்

அதே கண்ணாடி, கழுத்தில் மஃப்லர், பொறுத்தமான மீசை... இணையத்தில் வைரலாகும் பேபி கெஜ்ரிவால்
  • Share this:
 

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் கெஜ்ரிவால் போல வேடமணிந்த 2 வயது குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.


டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைக்கிறது. டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக பதவியேற்கிறார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் குவிந்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாட்டத்தில், தொண்டர் ஒருவர் தனது 2 வயது குழந்தையுடன் பங்கேற்றார். அப்போது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போல வேடமணிந்த அந்த குழந்தை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


இதையடுத்து, குழந்தையின் படம் ஆம் ஆத்மி டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு, மஃப்லர்மேன் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்