இயற்கையின் படைப்பில் சில உயிர்கள் அரியவகை அமைப்புகளுடன் பிறப்பது அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றது. மனித இனத்திலும் அப்படித்தான் சில குழந்தைகள் இயல்புக்கு மாறாக அதிசய உடல் அமைப்புகளுடன் பிறக்கின்றன. அப்படித்தான், மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு குழந்தை 4 நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹா என்ற கர்பிணி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தையை பிரசவித்துள்ளார். இந்த குழந்தை பிறக்கும் போது நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. 2.3 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவர் ஆர்கேஎஸ் தாகத் கூறுகையில், "சில கருக்கள் கூடுதல் அங்கங்கள் கொண்ட தன்மை கொண்டவை. மருத்துவ உலகில் இதை Ischiopagus என்று அழைப்பார்கள். இவ்வாறு தான் இந்த பெண் குழந்தைக்கு கூடுதலாக இரு கால்கள் உள்ளன. ஆனால், அந்த இரு கால்களும் செயல்படவில்லை. இந்த குழந்தை மற்ற சிக்கல்கள் ஏதுமில்லமால் நலனுடன் உள்ளது.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் விற்கப்பட்ட பாகிஸ்தானின் மாட்டிறைச்சி சாக்லெட்.?! பரபர புகார்!
இருப்பினும் வேறு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று பரிசோதித்து வருகிறோம். ஒரு வேளை குழந்தைக்கு வேறு சிக்கல்கள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், இந்த கூடுதலான இரு கால்களையும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடுவோம். பெண் குழந்தை நர்மலான வாழ்க்கையை வாழலாம்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Legs, Madhya pradesh, Viral News