பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை - நீதிமன்றம் தீர்ப்பு

பாபர் மசூதி

Babri Masjid Demolition Verdict பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

 • News18
 • Last Updated :
 • Share this:
  கடந்த 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 49 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நாளை தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது.

  நீதிபதி எஸ்.கே யாதவ், 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசித்து வருகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 26 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளனர். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ஆஜராகவில்லை.

  தீர்ப்பில், மசூதி இடிக்கப்பட்டது முன் கூட்டியே திட்டமிடப்பட்டது இல்லை என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.  மேலும், அத்வானி உள்ளிட்டோர் வன்முறையை கட்டுப்படுத்த முயன்றுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
  Published by:Sankar
  First published: