பாபிதா போகாத், யோகேஸ்வர் தத்! சட்டமன்றத் தேர்தலில் விளையாட்டு வீரர்களுடன் களமிறங்கும் பா.ஜ.க

பாபிதா போகாத், யோகேஸ்வர் தத்! சட்டமன்றத் தேர்தலில் விளையாட்டு வீரர்களுடன் களமிறங்கும் பா.ஜ.க

ஜே.பி.நட்டா, பாபிதா போகாத்

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் குத்துச் சண்டை வீராங்கனை பாபிதா போகாத் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீரர் யோகேஸ்வர் தட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

  மஹாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு அக்டோபர் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, இரு மாநிலங்களிலும் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய இரு கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

  இந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 78 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டுள்ளது.

  அதன்படி, முதல்வர் மனோகர் லால் கட்டார், கமால் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பா.ஜ.கவில் இணைந்த குத்துச் சண்டை வீரர் பாபிதா போகாத் தாத்ரி தொகுதியிலும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீரர் யோகேஸ்வர் தத் பரோடா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

  இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங், பெஹோவா தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

  Also see:

  Published by:Karthick S
  First published: