முகப்பு /செய்தி /இந்தியா / அலோபதி மருத்துவம் குறித்து அவதூறு பரப்பக்கூடாது - பாபா ராம்தேவிற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

அலோபதி மருத்துவம் குறித்து அவதூறு பரப்பக்கூடாது - பாபா ராம்தேவிற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ்

ஆயுர்வேத மருத்துவம் அலோபதி மருத்துவத்தை விட சிறந்த முறை என ஏதேனும் உத்தரவாதம் உள்ளதா எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

  • Last Updated :
  • Delhi, India

அலோபதி மருத்துவ முறை குறித்து விமர்சித்து பேசக்கூடாது என யோகா குரு பாபா ராம்தேவிற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

கடந்த ஆண்டு கொரோனா 2ஆம் அலையில் போது, பாபா ராம்தேவ் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ஆங்கில மருந்துக்கள் சாப்பிட்டு தான் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்த மருந்துக்கள் கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டது என தெரிவித்தார். 

இதற்கு அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அலோபதி மருத்துவம் பற்றி அவதூறாக பேசியதற்கு எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மன்னிப்பு கேட்காவிட்டால், ரூ.1000 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியது. அது மட்டுமின்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு, யோகாவில் புகழ்பெற்ற பாபா ராம்தேவிற்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பியது. மேலும் ஆயுர்வேத மருத்துவம், அலோபதி மருத்துவத்தை விட சிறந்த முறை என ஏதேனும் உத்தரவாதம் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: நான் ராஜ்புத் வம்சத்தைச் சேர்ந்தவன்.. தலையே போனாலும் தலைவணங்க போவதில்லை - மணீஷ் சிசோடியா

இவ்வாறு மருத்துவ கட்டமைப்பை விமர்சிப்பது, பொதுமக்களின் சுகாதார நலனை பாதிக்கக்கூடிய நடவடிக்கை என கடுமையாக விமர்சித்த நீதிமன்றம், மத்திய அரசும் பாபா ராம்தேவும் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிலும் ஆங்கில மருத்துவத்தை விமர்சிக்க கூடாது என கூறியிருந்தது. 

First published:

Tags: Baba Ramdev, Supreme court