ஹோம் /நியூஸ் /இந்தியா /

70 ஆண்டுகளில் ஒரு சன்னியாசி கூட ‘பாரத ரத்னா’ பெறவில்லை - பாபா ராம்தேவ் வேதனை!

70 ஆண்டுகளில் ஒரு சன்னியாசி கூட ‘பாரத ரத்னா’ பெறவில்லை - பாபா ராம்தேவ் வேதனை!

பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ்

சுவாமி விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, சிவகுமார சுவாமி ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்கிறார் பாபா ராம்தேவ்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா, கடந்த 70 ஆண்டுகளில் ஒரு சன்னியாசிக்கு கூட வழங்கப்படாதது வருத்தமளிப்பதாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகியவை 2 தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன.

பாரத ரத்னா விருது முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது. பத்ம விபூஷண் விருது 4 பேருக்கும், பத்ம பூஷண் விருது 14 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருது 94 பேருக்கும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாரத் ரத்னா விருது கடந்த 70 ஆண்டுகளில் ஒரு சன்னியாசிக்கு கூட வழங்கப்படாதது வருத்தமளிப்பதாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சுவாமி விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, சிவகுமார சுவாமி ஆகியோருக்கு பாரத  ரத்னா வழங்கப்பட வேண்டும் என்றார்.

விவேகானந்தர் உள்ளிட்டோர் நாட்டுக்கு அளப்பரிய கொடைகளை அளித்துள்ளதாக குறிப்பிட்ட பாபா ராம்தேவ், இவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Also watch

First published:

Tags: Baba Ramdev