பாஜக பெண் எம்.பி-யை ஆபாசமாக பேசிய எம்.பி. ஆசம்கான் மன்னிப்பு கோர உத்தரவு

ஆசம்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு பெண் எம்.பி.க்கள் கடிதமும் எழுதியுள்ளனர். எம்.பி.க்களுடன் ஆலோசித்து நடவடிக்கை குறித்து முடிவு செய்வதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

Web Desk | news18
Updated: July 26, 2019, 6:58 PM IST
பாஜக பெண் எம்.பி-யை ஆபாசமாக பேசிய எம்.பி. ஆசம்கான் மன்னிப்பு கோர உத்தரவு
ஆசம் கான் எம்.பி (சமாஜ்வாதி கட்சி)
Web Desk | news18
Updated: July 26, 2019, 6:58 PM IST
மக்களவையில் பாஜக பெண் எம்.பி. குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆசம்கான் மன்னிப்பு கோர வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

மக்களவையில் முத்தலாக் தடை மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய சமாஜ்வாதி தலைவர் ஆசம்கான், தற்காலிக சபாநாயகராக இருக்கையில் இருந்த ரமா தேவியிடம் ஆபாசமாக கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கு நேற்றே அவையில் கடும் எதிர்ப்பு எழுந்ததோடு ஆசம்கான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.


இந்நிலையில், இன்று காலை அவை கூடியதும் இந்த பிரச்னையை எழுப்பிய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி,ஆசம்கான் வெளியில் இப்படி பேசியிருந்தால் இந்நேரம் போலீஸ் கைது செய்திருக்கும் என்றார்.

அவரை ஆதரித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ஆசம்கான் மன்னிப்புக் கேட்காவிட்டால் அவையில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஆசம்கானின் கருத்து கண்டிக்கத்தக்கது என கூறிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கோண்டார்.

Loading...

ஆசம்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு பெண் எம்.பி.க்கள் கடிதமும் எழுதியுள்ளனர். எம்.பி.க்களுடன் ஆலோசித்து நடவடிக்கை குறித்து முடிவு செய்வதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

இந்நிலையில், ஆசம்கான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் மன்னிப்பு கோராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

Also Watch: 10 நாட்களில் கோடி ரூபாயை சுருட்டிய கும்பல்... தொடரும் சதுரங்க வேட்டை..

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...