Home /News /national /

கர்நாடகாவில் தயாரிக்கப்பட்டுள்ள 140 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட தேசியக்கொடி!

கர்நாடகாவில் தயாரிக்கப்பட்டுள்ள 140 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட தேசியக்கொடி!

தேசிய கொடி

தேசிய கொடி

Huge National Flag : கர்நாடகா மாநிலத்தில் 75 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்ட கையால் சுழற்றப்பட்ட காதித் துணி பயன்படுத்தி, மொத்தம் 3750 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு தேசியக் கொடியை உருவாக்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
நாட்டின்  75 வது ஆண்டு சுதந்திர தின விழாவைக் குறிக்கும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் ஒரு பகுதியாக, கர்நாடகா மாநிலம், கலபுர்கியில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள கமலாப்பூரில் விவசாயப் பின்னணி கொண்ட குடும்பம் ஒன்று மிகப்பெரிய தேசியக் கொடியை நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டது.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ரேவப்பா பொம்மன் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த கால இளைஞர்களிடம் நாட்டுப்பற்றை ஊக்குவிக்கவும், சுதந்திர இயக்கம் மற்றும் கொடியின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்குக் கற்பிக்கவும் ஒரு முன்னெடுப்பை கையில் எடுத்தனர்.

அதன்படி மொத்தம் 75 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்ட கையால் சுழற்றப்பட்ட காதித் துணி பயன்படுத்தி, மொத்தம் 3,750 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு தேசியக் கொடியை உருவாக்கியுள்ளனர். இது சுமார் 140 கிலோ எடை கொண்டுள்ளது. அரசின் கொடி தயாரிக்கும் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டு இந்தக் கோடி உருவாக்கப்பட்டதாக பொம்மன் கூறுகிறார்.

Independence day: 75வது சுதந்திர விழாவில் பங்கேற்கும் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பாடகி மேரி மில்பென்!

திரங்கா, தார்வாட் மாவட்டம் காரகா கிராமத்தில் இருந்து தேசியக் கொடியை உருவாக்கும் 300 பெண்கள் இங்கு வந்து, ஒன்றரை மாத முயற்சியில் சுத்தமான பருத்தியில் நெய்யப்பட்ட காதி துணியில் இந்தக் கொடியை உருவாக்கினர்.

பிதார்-கலபுராகி தேசிய நெடுஞ்சாலையில் கமலாபூர் தாலுகாவில் உள்ள மலைப் பகுதியில் உள்ள பச்சனல் கிராஸில் உள்ள ஒரு விளைநிலத்தில் இந்தக் கொடியைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்த கொடியை ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை காட்சிப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் தேசபக்தர்கள் கமால்பூர் சென்று இந்த அழகிய காட்சியை கண்டுகளிக்கலாம்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Independence day, Karnataka

அடுத்த செய்தி