பிரதமர் மோடிக்கு எதிராக போட்டி இல்லை...! அமித்ஷாவை சந்தித்தபின் அய்யாக்கண்ணு அறிவிப்பு

பாஜக தலைவர் அமித்ஷாவை அய்யாக்கண்ணு நேற்று சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் தமிழக அமைச்சர் தங்கமணி ஆகியோர் உடனிருந்துள்ளனர்.

news18
Updated: April 8, 2019, 1:43 PM IST
பிரதமர் மோடிக்கு எதிராக போட்டி இல்லை...! அமித்ஷாவை சந்தித்தபின் அய்யாக்கண்ணு அறிவிப்பு
அய்யாகண்ணு
news18
Updated: April 8, 2019, 1:43 PM IST
பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போட்டியிடுவார்கள் என்று அய்யாக்கண்ணு சமீபத்தில் அறிவித்த நிலையில், தற்போது பின்வாங்கியுள்ளார்.

விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 2017-ம் ஆண்டில் டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தினர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த இந்த போராட்டம் நீண்ட காலம் நடந்தது.

பிரதமர் மோடி சந்திக்க வேண்டும் என்று விவசாயிகள் நிர்வாணமாகக் கூட போராட்டம் நடத்தினர். ஆனால், இது எந்த முடிவையும் எட்டாமல் முடிவடைந்தது. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் 111 தமிழக விவசாயிகள் போட்டியிடுவார்கள் என்று அய்யாக்கண்ணு சமீபத்தில் அறிவித்திருந்தார்.

படிக்க... பள்ளிகளில் சமஸ்கிருதம் ஊக்குவிக்கப்படும் - பாஜக தேர்தல் அறிக்கை

இந்நிலையில், பாஜக தலைவர் அமித்ஷாவை அய்யாக்கண்ணு நேற்று சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் தமிழக அமைச்சர் தங்கமணி ஆகியோர் உடனிருந்துள்ளனர்.

அமித்ஷாவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அய்யாக்கண்ணு, அமித்ஷா உடனான சந்திப்பு மன நிறைவு அளிப்பதாகவும், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதால் மோடியை எதிர்த்து போட்டியிடப்போவதில்லை என்றும் கூறினார்.


Loading...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...