இந்தி தெரியாதவர்களை வெளியேற சொன்னேனா? நான் சொன்னது வேறு.... ஆயுஷ் அமைச்சக செயலர் விளக்கம்

Youtube Video

இந்தி தெரியாதவர்கள் யோகா வகுப்பில் இருந்து வெளியேறுமாறு தான் கூறியதாக வெளியான தகவலை, மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேச்சா மறுத்துள்ளார்.

 • Share this:
  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் யோகாவை கொண்டு சேர்க்கும் வகையில், யோகா சம்பந்தமான படிப்பை முடித்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேரை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நியமிக்க திட்டமிட்டுள்ளது. 350 நியூரோபதி மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களை தேர்வு செய்து அவர்களின் பட்டியல் மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவர் என 38 யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் 350 பேர் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டது இவர்களுக்கு கடந்த 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றன.

  கடைசி நாளான 20ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பித்தவுடன் அதில் உரையாற்றிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேச்சா, இந்தியில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது குறுக்கிட்ட தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், ஆங்கிலத்தில் உரையாற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்றும், இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து வெளியேறலாம் என தெரிவித்தார்.

  இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ஆயுஷ் துறை செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு அதிகாரியாக இப்படிப் பேசுவதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக சாடியுள்ள ஸ்டாலின், அதிகாரிகளை வைத்து இந்தியைத் திணிப்பதுதான் திட்டம் என்ற பாஜக அரசின் எண்ணத்தை வெளிப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதேபோல், ராமதாஸ், வைகோ, உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

   

  இந்நிலையில், விளக்கம் அளித்துள்ள ராஜேஷ் கொடேசா, நிகழ்ச்சிக்கு தொடர்பில்லாத பலர் பங்கேற்றதாகவும், அவர்கள் கூட்டத்திற்கு இடையூறு செய்தததால் அவர்களை வெளியேறுமாறு சொன்னதாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடைய பேச்சு மொழித்திணிப்பு என திரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர், தான் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசியதாக விளக்கம் அளித்துள்ளார்.
  Published by:Yuvaraj V
  First published: