கம்பராமாயண பாடலை குறிப்பிட்ட பிரதமர் மோடி - வீடியோ

அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயில் தேசத்தின் ஒற்றுமைக்கு பாலமாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கம்பராமாயண பாடலை குறிப்பிட்ட பிரதமர் மோடி - வீடியோ
பிரதமர் நரேந்திர மோடி.
  • News18
  • Last Updated: August 6, 2020, 8:07 AM IST
  • Share this:
ராமஜென்ம பூமியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பின், ராமர் கோயில் கல்வெட்டை திறந்து வைத்து, அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். அதைத்தொடர்ந்து உரையாற்றிய அவர், வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்றதை பாக்கியமாக கருதுவதாகக் கூறினார்.

இந்தியர்களின் தியாகம், போராட்டங்களால் ராமர் கோயில் எனும் கனவு நினைவாகியிருப்பதாகவும், இப்படி ஒரு நன்நாள் வந்ததை பலராலும் நம்ப முடியவில்லை என்று தெரிவித்தார். ராமர் கோயில் போராட்டத்தில் இருந்த உறுதியை யாராலும் மறக்க முடியாது.

ராமர் கோயிலுக்காக பல தலைமுறை உயிர்த்தியாகம் செய்திருப்பதாகக் குறிப்பிட்ட மோடி, வேண்டுதல்களுக்கு பதில் கிடைத்துள்ளதாகவும், போராட்டங்களுக்கு முடிவு கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

தனது நீண்ட உரையின்போது அவர், கம்பராமயண வரிகளை மேற்கோள்காட்டி பேசினார். ‘காலம் தாழ ஈண்டு இனும் இருத்தி போலாம்’ என்ற வரிகளை அவர் தமிழில் கூறினார். இதற்கு பொருளான, ‘முன்னேறுவதற்கு இதுதான் நேரம், காலந்தாழ்த்தாமல் முன்னேறி செல்லுங்கள்’ என்பதையும் அவர் விளக்கினார்
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading