அயோத்தி தீர்ப்பு! தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு

தேசிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ள வழக்கு என்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அயோத்தி தீர்ப்பு! தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு
நீதிபதி ரஞ்சன் கோகாய்
  • News18
  • Last Updated: November 9, 2019, 7:55 AM IST
  • Share this:
அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு வழங்கப்படும் பாதுகாப்பு இசட் பிளஸாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயோத்தியில் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி பிரச்னை தொடர்பாக சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 2 இந்து அமைப்புகளும், ஒரு முஸ்லிம் அமைப்பும் சமமாக பிரித்துக் கொள்ளுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து சம்பந்தப்பட்ட 3 அமைப்புகளான ராம் லல்லா, நிர்மோகி அகரா, சன்னி வக்பு வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன.

அந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீவிரமாக விசாரித்துவந்தது. பாபர் மசூதி - ராமர்ஜென்பூமி வழக்கு விசாரணை முழுவதும் அக்டோபர் 16-ம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ள வழக்கு என்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வழங்கப்படும் பாதுகாப்பு இசட் ப்ளஸாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


இசட் ப்ளஸ் பாதுகாப்பு என்பது மத்திய அரசால் வழங்கப்படும் உச்சகட்ட பாதுகாப்பாகும். மத்திய ஆயுதப்படை காவல் சார்பில் இந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதேபோல, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கவுள்ள எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திராசுத், அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also see:

First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading