Ayodhya Verdict: அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு - நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Web Desk | news18-tamil
Updated: November 9, 2019, 6:24 AM IST
Ayodhya Verdict:  அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு - நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு -  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நாடு முழுவதும் பாதுகாப்பு
Web Desk | news18-tamil
Updated: November 9, 2019, 6:24 AM IST
சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறும் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஏற்கனவே உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மாவட்டத்தில் டிசம்பர் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தி மட்டுமின்றி பதற்றமான பகுதிகள் என கண்டறியப்பட்ட மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.


கோவா மாநிலத்திலும் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 4000 பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

அயோத்தியில் மட்டும் சுமார் 12ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அயோத்தியின் அருகே உள்ள 8 கல்லூரிகள் தற்காலிக சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் காவல்துறையினருக்கும், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், காவல்துறையினருக்கு நவம்பர் 30ஆம் தேதி வரை விடுமுறை கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Loading...

உத்தர பிரதேசத்தில் 78 ரயில் நிலையங்கள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கு தொடர்பான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடவும் பைசாபாத் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது,

அதேசமயம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து கல்ல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


First published: November 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...