Ayodhya Verdict: மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் - பிரதமர் மோடி

News18 Tamil
Updated: November 9, 2019, 6:23 AM IST
Ayodhya Verdict:  மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
News18 Tamil
Updated: November 9, 2019, 6:23 AM IST
அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இதையொட்டி மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும்  என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அயோத்தியில் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி பிரச்னை தொடர்பாக சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 2 இந்து அமைப்புகளும், ஒரு முஸ்லிம் அமைப்பும் சமமாக பிரித்துக் கொள்ளுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பளித்தது.

அதை எதிர்த்து சம்பந்தப்பட்ட 3 அமைப்புகளான ராம் லல்லா, நிர்மோகி அகரா, சன்னி வக்பு வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன. அதில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழு 4 மாதம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.


அதனால் 40 நாட்கள் தினமும் வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் 16ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வரும் 17ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என பட்டியலிடப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் போப்டே, சந்திரசூட், அசோக் புஷன், அப்துல் நசீர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு தீர்ப்பை வழங்க உள்ளது. அதனால் உச்சநீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தீர்ப்பு யாருக்கும் வெற்றி தோல்வியாக இருக்காது என கூறியுள்ளார். தீர்ப்பு வெளியானதும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நாட்டு மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்து தரப்பினரும் சமூக நல்லிணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



 
First published: November 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...