முகப்பு /செய்தி /இந்தியா / கையில் வில் அம்புடன் சிலை எழுப்பி யோகி ஆதித்யநாத்திற்கு கோயில் கட்டிய நபர்!

கையில் வில் அம்புடன் சிலை எழுப்பி யோகி ஆதித்யநாத்திற்கு கோயில் கட்டிய நபர்!

யோகி ஆதித்யநாத்திற்கு கோயில் கட்டிய நபர்

யோகி ஆதித்யநாத்திற்கு கோயில் கட்டிய நபர்

யோகி ஆதித்தயநாத்தை ராமரின் அவதாரம் போல கையில் வில் மற்றும் அம்புடன் சித்தரித்து 5.4 அடி உயரத்தில் சிலை ஒன்றை பிரபாகர் மவுரியா வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ayodhya, India

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள அயோத்தியில் யோகி ஆதித்யநாத்தின் மிகப் பெரிய விசிறி அவருக்கு கோயில் ஒன்றை கட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அயோத்தியைச் சேர்ந்த பிரபாகர் மவுரியா என்ற அந்த நபர் யோகி ஆதித்யநாத்தின் தொண்டராக 2014ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், அயோத்தியில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள பரதுகண்ட் என்ற பகுதியில் யோகி ஆதித்தயநாத்திற்கு ரூ.8.5 லட்சம் செலவில் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார். மேலும், யோகி ஆதித்தயநாத்தை ராமரின் அவதாரம் போல கையில் வில் மற்றும் அம்புடன் சித்தரித்து 5.4 அடி உயரத்தில் சிலை ஒன்றை வைத்துள்ளார். இதற்கு யோகி மந்திர் என பெயர் வைத்துள்ள அவர், தினம் தோறும் இரு முறை அதற்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகிறார். இந்த கோயில் குறித்து பிரபாகர் மவுரியா கூறுகையில், யோகி ஆதித்யநாத் அவர்களின் உயரம் 5.4 அடி. எனவே, அவர் உயரத்தில் சிலை ஒன்றை வைத்து நான் இந்த கோயிலை வைத்துள்ளேன். அயோத்தியில் யார் ராமருக்கு யார் கோயில் கட்டுகிறார்களோ அவருக்கு நான் கோயில் எழுப்புவேன் என 2015ஆம் ஆண்டு உறுதி பூண்டேன்.

அதன்படி, உத்தரப் பிரதேசத்தில் யோகியின் ஆட்சியில் தான் ராமர் கோயில் கட்டப்படுகிறது. எனவே எனது சத்தியத்தை நிறைவேற்றும் விதமாக இந்த கோயிலை கட்டியுள்ளேன் என்றார். மேலும் யோகி ஆதித்தயநாத்தை புகழ் பாடி கீர்த்தனைகள் எல்லாம் தயாரித்து அதை கேசட்டுகளாக வெளியிடும் முயற்சியிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சிகள் மீதான ரெய்டுகளுக்கு பிரதமர் மோடி காரணமில்லை.. மம்தா திடீர் பல்டி

கடந்தாண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த மயூர் முண்டே என்பவர் பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அதேபோல யோகி ஆதித்தயநாத்திற்கு அவரின் ஆதரவாளர் ஒருவர் கோயில் கட்டியுள்ளது கவனம் பெற்றுள்ளது. இந்த சம்பவத்தை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

First published:

Tags: Temple, Uttar pradesh, Yogi adityanath