அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவிலில் ’டைம் கேப்சூல்’ புதைப்பா?

மாதிரிப்படம்

Ayodhya | அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவிலில் டைம் கேப்சூல் புதைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களுக்கு அறக்கட்டளை விளக்கம் அளித்துள்ளது

 • News18
 • Last Updated :
 • Share this:
  உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ராமர் கோயில் கட்டுவதற்கு ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் பூமி பூஜை நடக்க உள்ளது.

  பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய விஐபிக்கள் மட்டுமே இந்த பூமி பூஜையில் கலந்துகொள்கின்றனர்.

  இந்நிலையில் கோயில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் பூமிக்கு கீழே 200 அடி ஆழத்தில் டைம் கேப்சூல் புதைக்கப்படும் என்று தகவல் வெளியானது. அதாவது எதிர்காலத்தில் கோயில் குறித்த குழப்பங்களை தவிர்க்கும் வகையில் வரலாற்று தகவல்கள் அடங்கிய டைம் கேப்சூல் புதைக்கப்படும் என்று கூறப்பட்டது.

  சர்ச்சைகள் எதுவும் ஏற்படாமல் இருக்கும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை ராம் ஜென்ம பூமி எடுத்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த கேப்சூலை ஒரு செப்புத்தகடுக்குள் வைத்து புதைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. சமூக வலைதளங்களிலும் ஏராளமான புகைப்படங்கள் இது தொடர்பாக பரவியது.
  படிக்க: நடிகை வனிதா மீது போலீஸ் வழக்குப்பதிவு

  படிக்க: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் ஒரு லட்சத்தைக் கடந்த 5 மாநிலங்களில் மூன்று தென் மாநிலங்கள்

  படிக்க: கமலைப் புறக்கணித்தார்கள்: தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் - பாலிவுட் குறித்து கருணாஸ் ஆதங்கம்
  ஆனால்  இந்த தகவலுக்கு ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை மறுப்பு தெரிவித்துள்ளது. டைம் கேப்சூல் புதைக்கப்படும் என்ற தகவல் பொய்யானது என அறக்கட்டளையின் பொது செயலாளர் சம்பத் ராய் விளக்கமளித்துள்ளார். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
  Published by:Sankar
  First published: