ஆகஸ்ட் 5-இல் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு அழைப்பு..

கோப்புப்படம்.

அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலுக்கான பூமி பூஜை 5-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடும் தீவிரமடைந்துள்ளன.

 • Share this:
  அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை வரும் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. பூமிபூஜைக்கான சிறப்பு பூஜைகள் நாளை முதலே தொடங்கப்பட உள்ளன. இதனால், அயோத்தி நகரம் முழுவதும் மின் விளக்குகளால் ஜொலிக்க தொடங்கி விட்டன.

  நாளை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அயோத்தியில் பணிகளைப் பார்வையிடச் செல்ல உள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியான 4,000 போலீசாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

  Also read: கொரோனா தடுப்பு மருந்து அனைவருக்கும் சென்றடைய நீண்டகாலம் ஆகும் - உலக சுகாதார அமைப்பு

  பூமி பூஜை நடைபெறும் அன்று ஏற்றுவதற்காக 1.25 லட்சம் விளக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக மூத்த தலைவர்களாக கல்யாண் சிங், உமாபாரதி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அதேசமயம் பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட வில்லை என சர்ச்சைகள் வெளியான நிலையில், இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், விழாவில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
  Published by:Rizwan
  First published: