பிச்சைக்காரர்கள், ரிக்‌ஷா ஓட்டிகள் உட்பட அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடை: அறக்கட்டளை பெருமிதம்

பிச்சைக்காரர்கள், ரிக்‌ஷா ஓட்டிகள் உட்பட அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடை: அறக்கட்டளை பெருமிதம்

ராமர் கோயில் அலங்கார ஊர்தி

சுமார் 37,000 தொண்டர்கள் நன்கொடைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அறக்கட்டளை கூறுகிறது.

 • Share this:
  'அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு இதுவரை, 1,511 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது' என, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

  அயோத்தியில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த தேவ் கிரி கூறியதாவது :

  ராமர் கோவில் கட்டும் திருப்பணிக்கு நன்கொடை திரட்டும் பணி, ஜன., 15ல் துவங்கியது. இந்தியா முழுதும் ஏராளமானோர், தாராளமாக நன்கொடை வழங்கி வருகின்றனர். இதுவரை, 1,511 கோடி ரூபாய் நன்கொடை வசூலாகியுள்ளது. நாடு முழுதும், நான்கு லட்சம் கிராமங்கள் மற்றும் 11 கோடி குடும்பங்களிடம், நன்கொடை திரட்ட திட்டமிட்டுள்ளோம்.

  வரும், 27ம் தேதி வரை நன்கொடை திரட்டப்படும். 492 ஆண்டுகளுக்கு பின், தற்போது தான், நன்கொடை மூலம், அயோத்தி ராமர் கோவிலின் திருப்பணியில் பங்கேற்கும் வாய்ப்பு, மக்களுக்கு கிடைத்துள்ளது” என்றார்.

  ஜனவரி 15-ம் தேதி நன்கொடை வசூல் ஆரம்பித்தது. இந்த நிதியை வசூல் செய்ய ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் 150 குழுக்களை அமைத்துள்ளது. ரூ.10 முதல் பல தொகைக்களுக்கான நன்கொடை ரசீதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

  “குழந்தைகள் தங்கள் சேமிப்புகளை அளிக்கின்றனர். தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், தெரு விற்பனையாளர்கள், ரிக்‌ஷா ஓட்டிகள் ஆகியோரும் தங்களால் இயன்ற நன்கொடையை அளித்து வருகின்றனர். கிழக்கு முதல் மேற்கு வரை வடக்கு முதல் தெற்கு வரை அனைவரும் சாதி மத பேதமின்றி நன்கொடை அளித்து வருகின்றனர். அனைத்து மதத்தினரும் நன்கொடை அளித்து வருகின்றனர்” என்றார் சுவாமி கோவிந்த தேவ் கிரி.

  வசூலாகும் நிதி ராமர் கோயில் அறக்கட்டளை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகின்றன. ரூ.10, ரூ.100, ரூ.1000 கூப்பன்கள் வசூல் செய்பவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய வங்கிகளில் நன்கொடை வசூல் டெபாசிட் செய்யப்பட்டு வருகின்றன.

  சுமார் 37,000 தொண்டர்கள் நன்கொடைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அறக்கட்டளை கூறுகிறது.
  Published by:Muthukumar
  First published: