அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி நாளை தொடக்கம்

கோவிலின் மாதிரி வடிவம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நாளை தொடங்கப்பட உள்ளது.

 • Share this:
  காலை 8 மணியளவில் ராம ஜென்மபூமியில் உள்ள குபேர் திலா கோயிலில் சிவனுக்கு ருத்ராபிசேகம் நடத்தப்பட உள்ளதாகவும், இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த பூஜைக்கு பின்னர் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றும் ராமர் கோயில் அறக்கட்டளை செய்தி தொடர்பாளர் மகந்த் கமல் நயன் தாஸ் தெரிவித்துள்ளார்.

  சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த ராமர் சிலை மார்ச் மாதம் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு கோயில் கட்டுமானம் நடைபெற உள்ள இடத்தை சமன் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

  Also read... இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3.2 % ஆக குறையும் - உலக வங்கி


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: