அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையின் முதல் பிரசாதம் பெற்ற மஹாவீர் - யார் இவர்?

மஹாவீர் குடும்பத்தினர்

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவுப்படி முதல் பிரசாதம் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 • Share this:
  அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கோலகலமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி 40 கிலோ எடையிலான வெள்ளி செங்கலை எடுத்து கொடுத்து அடிக்கல் நாட்டினர்.

  கொரோனா வைரஸ் காரணமாக இந்த விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் பூமி பூஜை பிரசாதம் அயோத்தியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நேற்று வழங்கப்பட்டது. இதன் முதல் பிரசாதம் ஏழை தொழிலாளியான பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மகாவீர் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

  உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவுப்படி முதல் பிரசாதம் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் பிரசாதமாக லட்டு, துளசிமாலை மற்றும் ராமர் சரித்திரம் குறித்த பாடல்கள் அடங்கிய புத்தகம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற 2019 சட்டமன்ற தேர்தலின் போது மஹாவீர் வீட்டில் தான் யோகி ஆதித்யநாத் மதிய உணவு அருந்தினார். ஏழை கட்டிட தொழிலாளியான இவர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கீழ் பலன்பெற்று தற்போது சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.
  Published by:Vijay R
  First published: