Home /News /national /

ரூ.1800 கோடியில் அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள்: பக்தர்களுக்கு எப்போது அனுமதி?

ரூ.1800 கோடியில் அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள்: பக்தர்களுக்கு எப்போது அனுமதி?

ராமர் கோவில்

ராமர் கோவில்

கோயில் கட்டுமானத்துக்கு 400 கோடி ரூபாய் செலவாகும் என்று தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 1,800 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • uttar |
    அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள், 1,800 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும் என்று கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கோயிலின் தரைதளத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து கோவிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    ராமர் கோவிலின் செயல்பாடுகளுக்கு பொறுப்பான ஆணையமான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா (SRJBTK) கோவிலின் கட்டுமானத்தை மேற்பார்வை செய்கிறது. கட்டுமானக் குழுவின் தலைவராக முன்னாள் ஐஏஎஸ் நிருபேந்திர மிஸ்ரா உள்ளார். இந்நிலையில், ராமர் கோயில் அறக்கட்டளையின் கூட்டம் சென்ற வாரம் நடைபெற்றது. இதில், கோயில் கட்டுமானத்துக்கான செலவு உள்ளிட்ட மூன்று விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கோயில் கட்டுமானத்துக்கான விதிகள் இறுதிசெய்யப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோயில் கட்டுமானத்துக்கு 400 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்று தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 1,800 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மத்தியபிரதேச பன்னாவில் புலிகள் காப்பகம் மட்டுமல்ல..... இந்த இடங்களும் ஃபேமஸ்தான்

    21 அடி உயர பீடத்தில் கட்டடம் கட்டப்பட உள்ளது. 17 ஆயிரம் கிரானைட் கற்களைப் பயன்படுத்தி, பீடத்தை கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

    இதனைத் தொடர்ந்து, மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளது. இதில் கர்ப கிரகம் மற்றும் 5 மண்டபங்களும் கூடிய தரைதளத்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    பக்தர்களுக்கான மையம் மற்றும் பிற வசதிகளை வழங்குவதற்கான கட்டுமானப் பணிகளும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீனாவில் மருத்துவ படிப்பு.. இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? - இந்திய தூதரகம் விளக்கம்

    மேலும், கோயிலின் கட்டடத்துக்கு 4. 75.000 கனஅடி தொலைவுகொண்ட பன்சி பகர்பூர் கற்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    பயணிகளுக்கான வசதிகளுக்கான கட்டடத்தில் காலணிகள் உள்ளிட்டவற்றை பாதுகாத்து வைத்திருக்கும் இடம், 5,000 பக்தர்கள் காத்திருக்கும் அறை, குடிநீர் வசதி, கழிவறை மற்றும் பிற வசதிகள் இருக்கும் என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அருங்காட்சியகம், ஆய்வு மையம், நூலகம் ஆகியவையும் இடம்பெற உள்ளன.

    இதில், தரைதளப் பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதற்கு 15 நாட்கள் கழித்து, அதாவது, 2024-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி ராமர் சிலை நிறுவப்படும் என்று ராமஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
    Published by:Ilakkiya GP
    First published:

    Tags: Ramar temple, Uttar pradesh

    அடுத்த செய்தி