அயோத்தி ராமர் கோயில் நிலம் தொடர்பாக எழுந்துள்ள இன்னொரு ஊழல் குற்றச்சாட்டு

மாதிரிப்படம்

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்காக ரூ.30 லட்சத்திற்கு மடத்திலிருந்து வாங்கப்பட்ட நிலத்தை ரூ.2.5 கோடிக்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வாங்கியுள்ளது தொடர்பாக இன்னொரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

 • Share this:
  அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்காக ரூ.30 லட்சத்திற்கு மடத்திலிருந்து வாங்கப்பட்ட நிலத்தை ரூ.2.5 கோடிக்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வாங்கியுள்ளது தொடர்பாக இன்னொரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  கடந்த மார்ச் 18-ல் ராமர் கோயிலுக்காக அயோத்தியில் 1,208 ஹெக்டேர் நிலம் வாங்கப்பட்டது. சுல்தான் அன்சாரி மற்றும் இதர நபர்கள் ரூ.2 கோடிக்கு வாங்கிய இந்த நிலத்தை அடுத்த சில நிமிடங்களில் ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு ரூ.18.5கோடிக்கு விற்பனை செய்ததாகப்புகார் எழுந்தது. இந்த புகாரைஆதாரங்களுடன் அறக்கட்டளையினர் மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது

  இந்நிலையில் அயோத்தியில் ராமஜென்ம பூமிக்கு வெகு அருகில் அமைந்துள்ளது தசரதா மஹால் கோயில் மடம். இம்மடத்தின் 890 சதுர மீட்டர் அளவிலான நிலம் ராமர் கோயிலுக்காக கடந்த பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை நேரடியாக ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு இன்றி அதன் பெயரில் அயோத்தியின் பாஜக மேயரான ரிஷிகேஷ் உபாத்யாவின் மருமகனான தீப் நாராயண் வாங்கியுள்ளார்.

  இவருக்கு தசரத மஹால் மடத்தின் தலைவரான மஹந்த் தேவேந்திர பிரசாத் ஆச்சார்யா ரூ.30 லட்சத்திற்கு நிலத்தை விற்பனை செய்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதில், பதிவு பத்திரத்தில் ரூ.20 லட்சம் எனக் குறிப்பிட்டு மீதத்தொகை ரூ.10 லட்சம் ரொக்கமாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலம், ராமர் கோயிலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அதன் பிறகு இந்த நிலம், ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு தீப் நாராயண் சார்பில் ரூ.2.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த நிலபேரத்திலும் ஊழல் புகார் எழுந்துள்ளது.

  இது குறித்து தசரதா மஹால் மடத்தின் தலைவரான மஹந்த் தேவேந்திர பிரசாத், ‘நாங்கள் விற்பனை செய்தது பல ஆண்டுகளுக்கு முன் அரசிடம்இருந்து பெறப்பட்ட நஜூல் நிலம். எனவே, கிடைத்த விலையே லாபமானது எனவும் ராமர் கோயிலுக்காக என்பதாலும் ரூ.30 லட்சத்திற்கு விற்பனை செய்து விட்டோம். ஆனால், அதை ரூ.2.5 கோடிக்கு அவரது மருமகனிடமிருந்து அறக்கட்டளையினர் வாங்கியது குறித்து எங்களுக்கு தெரியாது’ எனத் தெரிவித்தார்
  Published by:Muthukumar
  First published: