அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை: உச்சநீதிமன்றம்

news18
Updated: September 28, 2018, 10:10 AM IST
அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை: உச்சநீதிமன்றம்
news18
Updated: September 28, 2018, 10:10 AM IST
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் எவருக்குச் சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

கடந்த 1950-ஆம் ஆண்டில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த கோபால் சிங் என்பவர் அயோத்தி நிலத்துக்கு உரிமை கோரி முதன்முதலாக மனுதாக்கல் செய்தார். அதேபோன்று இஸ்லாமிய அமைப்பு சார்பில் சித்திக் என்பவரும் மனு தாக்கல் செய்தார். மனுதாரர்கள் இருவருமே இறந்துவிட்ட நிலையிலும், அதுதொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில் இருந்து வருகிறது.
மசூதி இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் இடம் என்பதால் அதை அரசு கையகப்படுத்தக்கூடாது என்று 1994-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் டாக்டர் இஸ்மாயில் ஃபரூக்கி என்பவர் தொடர்ந்த வழக்கில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மசூதி தேவை இல்லை என்றும் திறந்தவெளி உள்ளிட்ட எந்த இடத்திலும் தொழுகை நடத்தலாம் என்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கூறியிருந்தது.

இந்த உத்தரவிற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், "அயோத்தி வழக்கில்  வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் மூலம் மறுஆய்வு செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷன், எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

Loading...

அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி அசோக் பூஷன் ஆகியோர் மறுத்துவிட்டனர். 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வே சர்ச்சைக்குரிய அயோத்தி இட விவகாரம் குறித்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் எனவும் தெரிவித்தனர். அக்டோபர் 29 உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரிக்கும் என்றும் கூறியுள்ளனர்.

ALSO READ...

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா...?

ALSO WATCH...

First published: September 28, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...