அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் காக்கவேண்டும்! காங்கிரஸ் வேண்டுகோள்

அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் காக்கவேண்டும்! காங்கிரஸ் வேண்டுகோள்
  • News18
  • Last Updated: November 9, 2019, 1:25 PM IST
  • Share this:
அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் அனைத்துக் கட்சிகளும் அனைத்து தரப்பு மக்களும் காக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்த காங்கிரஸ் கட்சி அறிக்கையில், ‘அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது.

அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் காப்பாற்றி
நம்முடைய அரசியலைமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற பண்புகளையும் சகோதரத்துவத்தையும் அனைத்து கட்சிகளும் எல்லா தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துக் கொள்கிறோம். பரஸ்பர மரியாதை செலுத்தும் நம்முடைய பாரம்பரியத்தைக் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்’ என்று தெரிவித்துள்ளது.

Also see:
First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்