அயோத்தி வழக்கு: ஜன.10 முதல் அரசியல் சாசன அமர்வில் விசாரணை

பாபர் மசூதி இருந்த இடம், ராமர் பிறந்த இடம் என்ற சர்ச்சை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது.

அயோத்தி வழக்கு: ஜன.10 முதல் அரசியல் சாசன அமர்வில் விசாரணை
உச்ச நீதிமன்றம்
  • News18
  • Last Updated: January 8, 2019, 10:11 PM IST
  • Share this:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இருந்த இடம், ராமர் பிறந்த இடம் என்ற சர்ச்சை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில், 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நிலத்தை மூன்றாக பிரித்து ராமர் கோவில், இஸ்லாமிய வக்ஃபு வாரியம், நிர்மோகி அகரா இந்து அமைப்பு ஆகியவற்றுக்கு பிரித்து வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் நிலையில், இவ்வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வரும் 10-ம் தேதி முதல் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Also watch

First published: January 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading