அயோத்தி வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு! டிசம்பர் 10-ம் தேதி வரை 144 தடை உத்தரவு

தசரா விடுமுறையை அடுத்து 38-வது நாளாக உச்சநீதிமன்றத்தின் விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது.

அயோத்தி வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு! டிசம்பர் 10-ம் தேதி வரை 144 தடை உத்தரவு
அயோத்தி நிலப்பிரச்னை
  • News18
  • Last Updated: October 14, 2019, 10:28 PM IST
  • Share this:
அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில், டிசம்பர் 10-ம் தேதி வரை அயோத்தியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் நியமித்த 3 பேர் கொண்ட சமரசக் குழுவின் முயற்சிக்குப் பலன் இல்லாதததால், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தினசரி விசாரித்து வருகிறது.

வரும் 17-ம் தேதிக்குள் அனைத்துத் தரப்பு வாதங்களையும் முடித்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தசரா விடுமுறையை அடுத்து 38-வது நாளாக உச்சநீதிமன்றத்தின் விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதால், அயோத்தியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டிசம்பர் 10ஆம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Also see:

First published: October 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்