அயோத்தி வழக்கு: மத்தியஸ்தர் குழுவுக்கு கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி, கேமரா முன்னிலையில் பல்வேறு இந்து, முஸ்லீம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அயோத்தி பிரச்சினைக்கு சுமுகத்தீர்வு காண முயற்சி மேற்கொண்டது.

Vijay R | news18
Updated: May 10, 2019, 5:28 PM IST
அயோத்தி வழக்கு: மத்தியஸ்தர் குழுவுக்கு கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு
உச்ச நீதிமன்றம்
Vijay R | news18
Updated: May 10, 2019, 5:28 PM IST
அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் மத்தியஸ்தர் குழுவுக்கு கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தி வழக்கில் சுமுகத்தீர்வு காணும் வகையில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் ஆன்மிகத் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய மூன்று நபர் நடுவர் குழுவை கடந்த மார்ச் மாதத்தில் உச்சநீதிமன்றம் அமைத்தது.

இக்குழு உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி, கேமரா முன்னிலையில் பல்வேறு இந்து, முஸ்லீம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அயோத்தி பிரச்னைக்கு சுமுகத்தீர்வு காண முயற்சி மேற்கொண்டது. அது தொடர்பான கருத்துகளை தொகுத்து 13 ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையை பேச்சுவார்த்தைக் குழு கடந்த 6-ம் தேதி தாக்கல் செய்தது.


இதையடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இணக்கமான பேச்சுவார்த்தையை முழுமையாக முடிக்க மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சமரசக் குழு கேட்டுக்கொண்டது.

இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மத்தியஸ்த பேச்சுவார்த்தையை முழுமையாக முடிக்க சமரசக் குழுவுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்தியஸ்த குழுவின் பேச்சுவார்த்தைகளில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எதுவும் தெரிவிக்கப் போவதில்லை என்றும், அது ரகசியமாக வைக்கப்படும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Also Watch

Loading...

First published: May 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...