அயோத்தி வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா?

அயோத்தி வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா?
அயோத்தி வழக்கு
  • News18
  • Last Updated: September 27, 2018, 10:45 AM IST
  • Share this:
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதி தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தின் ராமஜென்ம பூமி என கூறப்படும் சர்ச்சைக்குரிய பகுதி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மசூதி என்பது இசுலாமியர்களின் ஒரு அங்கம் அல்ல என தெரிவித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய பகுதியை மாநில அரசு எடுத்துக் கொண்டது அரசியல் சாசனத்துக்கு எதிரானது அல்ல என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது பற்றி இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யாவிட்டால், இன்றே இறுதி தீர்ப்பு வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 1950-ஆம் ஆண்டில் வலது சாரி அமைப்பைச் சேர்ந்த கோபால் சிங் என்பவர் அயோத்தி நிலத்துக்கு உரிமை கோரி முதன்முதலாக மனுதாக்கல் செய்தார். அதேபோன்று இஸ்லாமிய அமைப்பு சார்பில் சித்திக் என்பவரும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுதாரர்கள் இருவருமே தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கக்து.


ALSO WATCH....





First published: September 27, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading