#ayodhyarammandir அயோத்தி வழக்கு விசாரணை குறித்து ஜனவரியில் முடிவு: உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா அமைப்புகள் பிரித்து கொள்ளுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை குறித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவு செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா அமைப்புகள் பிரித்து கொள்ளுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது, வருகிற ஜனவரி மாதம் முதல் வாரத்தில், அயோத்தி வழக்கை எப்போதிலிருந்து விசாரிப்பது என முடிவு செய்யப்படும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். மேலும் வழக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என எப்போது வேண்டுமானாலும் விசாரிக்கப்படும் என்றும், வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் குழு அப்போது முடிவு செய்யப்படும் எனவும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

    Also watch

    Published by:DS Gopinath
    First published: