ஹோம் /நியூஸ் /இந்தியா /

தண்ணீர் சேமிப்புக்கான தலைச்சிறந்த திட்டங்கள் - இதோ லிஸ்ட்!

தண்ணீர் சேமிப்புக்கான தலைச்சிறந்த திட்டங்கள் - இதோ லிஸ்ட்!

தண்ணீர் சேமிப்பு

தண்ணீர் சேமிப்பு

பீகார் மாநிலத்தில் நாலந்தா நகரில் செயல்படுத்தப்படும் தண்ணீர் சேமிப்பு திட்டம்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

 ,சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்தையொட்டியே மனித வாழ்க்கை இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை குளம், குட்டைகளில் சேகரிக்கப்படும் நீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரத்தை நம்பியே பெரும்பாலான பகுதிகள் இருக்கின்றன. பருவமழை பொய்க்கும் காலங்களில், இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நிலை பரிதாபத்துக்குரியது. விவசாயமும் செய்ய முடியாமல், அடிப்படை ஆதாரமான குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தொலைவு அலைந்து திரிகின்றனர்.

இதேநிலை நீடித்தால் எதிர்காலத்தில் தண்ணீருக்கான தேவை பன்மடங்கு அதிகரிக்கும், நாட்டின் பல பகுதிகள் பூஜ்ஜிய தண்ணீரை எட்டவும் வாய்ப்புள்ளது. இதனால், மழை நீர் சேகரிப்பு என்பது மிகமிக அத்தியாவசியமாகிறது. இது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தண்ணீர் சேமிப்பில் ஈடுபட்டால், நிச்சயமாக தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

அதற்கு முன்மாதிரியாக நாட்டின் பல பகுதிகளில் தண்ணீர் சேகரிப்புக்காக பல முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஜல் சஞ்சய் திட்டம் :

பீகார் மாநிலத்தில் நாலந்தா நகரில் செயல்படுத்தப்படும் தண்ணீர் சேமிப்பு திட்டம். இந்த திட்டம் என்பது அதிக தடுப்பணைகள் கட்டுவது, பாசன வாய்க்கால்கள் மற்றும் பாரம்பரிய நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் புனரமைத்து தண்ணீர் சேமிப்பு செய்ய நடைமுறைப்படுத்தப்பட்டது. நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன், விவசாயிகளின் பொது அறிவையும் பயன்படுத்தி கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றது. நாலந்தா விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பெரும் பலனை அனுபவித்தனர்.

50 நாட்களில் 100 குளங்கள் :

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 1980களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தன. 2016 ஆம் ஆண்டில் அவற்றின் எண்ணிக்கை 700 ஆக சுருங்கியது. இதனால், அந்த மாவட்டம் அந்த ஆண்டில் கடுமையான வறட்சியையும் எதிர்கொண்டு, வறட்சியில் பாதிக்கப்பட்ட பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டது. அப்போது, அந்த பகுதியின் ஆட்சியராக இருந்த கே முகமது ஒய். சஃபிருல்லா, 50 நாட்களில் 100 குளங்கள் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் 43 நாட்களிலேயே நிர்ணயித்த இலக்கை வெற்றிகரமாக எட்டியது. பின்னர், 60 நாட்களில் 163 குளங்களையும் சுத்தம் செய்தனர்.

ஜீவிகா திட்டம் :

நீர் மேலாண்மையை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட திட்டம். ஜம்மு காஷ்மீரில் இருக்கும் உதம்பூர் மாவட்டத்தில் சுமார் 80 விழுக்காட்டினர் விவசாயத்தை முதன்மை தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். அங்கு, அவர்களின் நிலத்திலேயே பிளாஸ்டிக் ஷீட் கொண்டு பண்ணைக் குட்டை அமைக்கப்படுகிறது. அந்த குளத்தில் சேமிக்கப்படும் நீர், விரைவாக வற்றாது. மேலும், சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி நீரை சிக்கனமாக பயன்படுத்துவதுவது எப்படி? என்றும் கற்றுத் தரப்படுகிறது.

இதேபோல், நியூஸ் 18 குழுமமும், மிஷன் பாணி, ஹார்பிக் இந்தியா ஆகிய நீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

First published:

Tags: Mission Paani