• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தவறுதலாக ஆட்டோவில் ரூ.2.6 லட்சத்தை விட்டுச்சென்ற பயணி.. பணத்தை மீட்டுத்தந்த ஆட்டோ டிரைவருக்கு பரிசுத்தொகை அளித்த காவல்துறை! - குவியும் பாராட்டுக்கள்!!

தவறுதலாக ஆட்டோவில் ரூ.2.6 லட்சத்தை விட்டுச்சென்ற பயணி.. பணத்தை மீட்டுத்தந்த ஆட்டோ டிரைவருக்கு பரிசுத்தொகை அளித்த காவல்துறை! - குவியும் பாராட்டுக்கள்!!

தான் இறங்க வேண்டிய இடத்தை அடைந்த பிறகு, பாண்டே தன்னிடம் இருந்த பணப்பையை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து மறந்த பையை ஞாபகப்படுத்திய பாண்டே நேராக சாமராஜ்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்ததாக கூறியுள்ளார்.

  • Share this:
கருணை மற்றும் நேர்மை தொடர்பான சில சம்பவங்கள் மனிதர்களின் மீதான நம்பிக்கையை எப்போதும் புதுப்பிக்கின்றன. அவ்வகையில், அனைவரையும் ஈர்க்கும் வகையில் ஒரு சம்பவம் பெங்களூரில் சமீபத்தில் நடந்துள்ளது. 54 வயதான ஆட்டோரிக்ஷா டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் பயணம் செய்த பயணியின் ரூ. 2.6 லட்சம் கொண்ட ஒரு பையை திருப்பி பத்திரமாக அளித்துள்ளார். இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த செயலுக்காக ஆட்டோரிக்ஷா டிரைவர் குமார், பெங்களூரு டேப்புட்டி போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம் பாட்டீலால் கௌவுரவிக்கப்பட்டுள்ளார். அமித் குமார் பாண்டே என அடையாளம் காணப்பட்ட ஒரு பயணிக்கு ரூ .2.6 லட்சம் மதிப்புள்ள ஒரு பையை திருப்பி அனுப்பியதற்காக அவர் பாராட்டப்பட்டார்.

K.R புரம் அருகே ஆனந்த்புராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் குமார், மும்பையைச் சேர்ந்த பாண்டேவை காட்டன்பேட்டையிலிருந்து (Cottonpet) அழைத்துக்கொண்டு, சாமராஜ்பேட்டையில் உள்ள எட்கா மைதானத்திற்கு அருகே இறக்கிவிட்டுள்ளார். அப்போது இருக்கையில் அந்த நபரின் பை இருப்பதை அறியாமல், பாண்டேவைக் இறக்கிவிட்ட குமார், ஸ்ரீநகரில் இறங்க வேண்டிய மற்றொரு பயணியை அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்து, மீடியாக்களுடன் பேசிய குமார், ``மிகவும் அவசரமாக செல்லவேண்டிய காரணத்தினாலோ என்னவோ பாண்டே தனது பையை மறந்து ஆட்டோவிலேயே வைத்துவிட்டு இறங்கிவிட்டார். இதனை தாமதமாக தெரிந்துகொண்ட பிறகு, பெண் பயணிகளை ஸ்ரீநகரில் இறக்கிவிட்டு, பின்னர் பாண்டேவைக் இறக்கிவிட்ட இடத்திற்குச் சென்றேன்" எனக்கூறினார்.

முன்பு எட்கா மைதானத்திற்கு அருகில் இறங்கிய பாண்டே ஒரு கடைக்குள் நுழைந்ததை குமார் நினைவு கூர்ந்தார், எனவே அவர் கடைக்காரரை சந்தித்து பாண்டே பற்றி விசாரித்தார். கடைக்காரர் பாண்டேவை அழைத்த, சில நிமிடங்களுக்குப் பிறகு, பாண்டே போலீசாருடன் வந்தார். குமார் தன்னிடம் இருந்த பையை அவரிடம் திருப்பி கொடுத்துள்ளார். மும்பையைச் சேர்ந்த ஃபோட்டோ ஃபிரேம் ஒர்க்ஸ் செயினில் பாண்டே மேனேஜராக உள்ளதாகவும், கிளையண்ட்களிடமிருந்து பணத்தை பெற பெங்களூருக்கு வருகை தந்ததாகவும் சாமராஜ்பேட்டை போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பேசிய ஒரு அதிகாரி, வெவ்வேறு கடைகளிலிருந்து பணம் சேகரித்த பின்னர், பாண்டே புதன்கிழமை பணத்தை ஒரு பையில் வைத்திருந்தார்.

பாண்டே தனது உடமைகளை ஒரு பையிலும் இன்னொரு பையில் பணத்தையும் வைத்திருந்தார். அதன் பிறகு காலையில் குமாரின் ஆட்டோவில் ஏறினார். தான் இறங்க வேண்டிய இடத்தை அடைந்த பிறகு, பாண்டே தன்னிடம் இருந்த பணப்பையை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து மறந்த பையை ஞாபகப்படுத்திய பாண்டே நேராக சாமராஜ்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்ததாக கூறியுள்ளார்.

கடைக்காரரின் போன் காலின்போது பாண்டே காவல் நிலையத்தில் இருந்துள்ளார். அப்போது கடைக்காரர், உங்களுக்காக ஆட்டோ டிரைவர் குமார், என் கடையில் காத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். காவல்துறை அதிகாரி கூறுகையில், நாங்கள் பாண்டேவுடன் கடைக்குச் சென்றபோது, குமார் பணப்பையுடன் காத்திருப்பதைக் கண்டதாகவும், போலீசின் முன் பையை சரிபார்க்கும்படி பாண்டேவிடம் கேட்டதாகவும் பின்னர் பணம் சரியாக இருந்தது என்று கூறி, பாண்டே, குமாரின் நேர்மைக்காக வெகுமதியாக ரூ .3,000 ஐ கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். போலீசார் இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த பிறகு, பையை பாண்டேவிடம் ஒப்படைத்தனர். பின்னர் குமாரின் இந்த நேர்மைத்தவராத செயலுக்காக DCP பாட்டீல் ரூ .8,000 ஐ வழங்கி குமாரை கௌரவப்படுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: