ஹோம் /நியூஸ் /இந்தியா /

நிம்மதி இழந்து தவிக்கிறேன் - லாட்டரியில் ரூ.25 கோடி வென்றும் புலம்பும் ஆட்டோ டிரைவர்

நிம்மதி இழந்து தவிக்கிறேன் - லாட்டரியில் ரூ.25 கோடி வென்றும் புலம்பும் ஆட்டோ டிரைவர்

ஆட்டோ டிரைவர் அனூப்

ஆட்டோ டிரைவர் அனூப்

லாட்டரியில் வெற்றி பெறாமலே இருந்திருக்கலாம், லாட்டரியால் நிம்மதி இழந்து தவிக்கிறேன் என கேரளா ஓணம் லாட்டரியில் ரூ. 25 கோடி பரிசு வென்ற ஆட்டோ ஓட்டுநர் அனூப் புலம்பி தவிக்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kerala, India

  பொருளாதார நெருக்கடியால் பணம் சம்பாதிப்பதற்காக மலேசியாவுக்கு செல்லும் திட்டத்தில் இருந்த அனுப், மகனின் உண்டியலில் இருந்து 50 ரூபாயை எடுத்து ஓணம் பம்பர் லாட்டரி சீட்டு வாங்கியிருந்தார். அதில் முதல் பரிசாக ரூ. 25 கோடி விழ மகிழ்ச்சியில் திக்குமுக்காடியது அவரது குடும்பம். பணமழையுடன் வாழ்த்துமழையும் பொழிய ஒரே நாளில் கோடீஸ்வரரான அனுப்பின் சந்தோஷம் சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

  அவரது திருவனந்தபுரம் வீட்டைத் தேடி ஏராளமானோர் படையெடுக்க தொடங்கிவிட்டனர். அவருக்கு வாழ்த்து கூற அல்ல மாறாக அவரிடம் பண உதவி கேட்டு பலரும் சென்றனர். லாட்டரியில் வென்றது ரூ. 25 கோடி என்றாலும் வரியெல்லாம் போக அனுப்பிற்கு கிடைக்கப்போவது ரூ. 15.75 கோடி தான். அதுவும் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை. ஆனால் அதற்குள் உற்றார் உறவினர் மற்றும் முகம்தெரியாதோர் என பலரும் பணம் கேட்டு அனூப் வீட்டு கதவை தட்டிக்கொண்டிருக்கின்றனர்.

  மாஸ்க் அணிந்து கொண்டு கூட எங்கேயும் செல்ல முடியவில்லை என வேதனைப்படும் அனுப், வீட்டிற்குள்ளேயே மாட்டிக் கொண்டது போல உணர்கிறோம் என கலங்குகிறார். பார்ப்பவர்கள் எல்லோரின் கண்களும் பணத்தையே தேடுவதால் வீட்டை மாற்றிக் கொண்டு போய்விடலாமா என நினைக்கத் தொடங்கிவிட்டார் அனுப். மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில மாதங்களாகவே ஆட்டோ ஓட்டச் செல்லாத அவருக்கு இந்த லாட்டரி பரிசுதான் வாழ்க்கையில் கொஞ்சம் மூச்சு விட்டு இளைப்பாற வைத்திருக்கிறது.

  இதையும் வாசிக்க: கோமாவில் இருப்பதாக கூறி இறந்தவரின் உடலை 18 மாதங்களாக வைத்திருந்த குடும்பம் - அதிர்ச்சி சம்பவம்

  வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக பணத்தை வைத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம் என நினைத்தால் நீ, நான் என போட்டி போட்டு உதவி கேட்டு பலரும் கரம் நீட்டுவதால் அவர், வெளியே செல்வதையே நிறுத்திவிட்டார். இந்நிலையில், எல்லோருக்கும் உதவுகிறேன் என கூறிக் கொண்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளாதே என எச்சரித்திருக்கிறார் கடந்த ஆண்டு லாட்டரியில் ரூ.12 கோடி ஆட்டோ ஓட்டுநரான ஜெயபாலன்.

  மேலும் கோடீஸ்வரரான பின்பும் ஆட்டோ ஓட்டுவதை கைவிடாத அவர், பணம் தராவிட்டால் உறவினர்கள் கூட எதிரியாகிவிடுவார்கள் என தனது சொந்த அனுபவத்தில் இருந்து எச்சரிக்கை விடுத்துள்ளார். மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கவில்லை என்பது போல, 25 கோடி ரூபாய் பரிசு வாங்கினாலும் நிம்மதியை வாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் அனூப்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Auto Driver, Kerala, Onam special lottery