• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • யோகி ஆதித்யநாத் அரசுக்கு ஆஸ்திரேலிய எம்.பி பாராட்டு!

யோகி ஆதித்யநாத் அரசுக்கு ஆஸ்திரேலிய எம்.பி பாராட்டு!

yogi adityanath

yogi adityanath

கொரோனா தொற்றை திறம்பட கட்டுப்படுத்தியதற்காக உத்தரப்பிரதேச அரசு சர்வதேச அளவிலான பாராட்டை பெற்றுள்ளது.

  • Share this:
உத்தரப்பிரதேச அரசு கொரோனா இரண்டாம் அலையை திறம்பட கட்டுப்படுத்தியதற்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ஆஸ்திரேலிய எம்.பி ஜேசன் வுட் பாராட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேசம் இந்தியாவின் மக்கள் தொகை அடிப்படையில் நம்பர்-1 மாநிலமாகும். இங்கு 20 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியாவின் பிற மாநிலங்கள் போலவே சமீபத்திய கொரோனா இரண்டாம் அலையால் உத்தரப்பிரதேசமும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் மாதவாக்கில் அங்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது.

ஆனால் மாநில அரசின் சீரிய நடவடிக்கைகளின் மூலம் தற்போது நோய்பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உத்தரப்பிரதேசத்தின் மொத்தம் உள்ள 75 மாவட்டங்களில், 59 மாவட்டங்களில் ஒருவர் கூட புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. மேலும் பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,91,446 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 33 பேருக்கு மட்டுமே கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் எனப்படும் பரிசோதனை மேற்கொள்பவர்களின் கொரோனா உறுதிசெய்யப்படுபவர்களின் விகிதம் உத்தரப்பிரதேசத்தில் 0.01%க்கும் குறைவாக உள்ளது. இந்தியாவில் மக்கள் தொகையில் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் தற்போதைய நிலவரப்படி 187 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

Also Read:  டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி கார்.. லோ பட்ஜெட்டில் ஒரு மினி ஹாரியராக களமிறங்குகிறது..

வியக்கவைக்கும் வகையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியதற்காக தற்போது சர்வதேச அளவிலான பாராட்டை உத்தரப்பிரதேச அரசு பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய எம்.பி ஜேசன் வுட், கொரோனா தொற்றை வெகுவாக உ.பி மாநில அரசு கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், உத்தரப்பிரதேச அரசுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாகவும் கூறினார்.

Also Read:    தாலிபான்களால் தலைமறைவாக வாழும் 200 பெண் நீதிபதிகள்!

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உ.பி மாநில கொரோனா மேலாண்மையை நான் பாராட்டுகிறேன். உ.பி முதல்வர் யோகியின் அன்பான மெசேஜுக்காக அவருக்கு நன்றிகள். என தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: