திரிபுரா சட்டப்பேரவையின் 60 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த பிப்ரவரி 16, 2023 அன்று திரிபுரா சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 2 மார்ச் 2023 அன்று அறிவிக்கப்பட்டன.
அதன்படி அகர்தலாவின் பதர்காட்டில் ஒரே தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டதால் திரிபுரா இந்த முறை தனித்துவமான போட்டியைக் கண்டது. அதுமட்டும் அல்லாமல் பாஜக வேட்பாளரான அத்தை மீனா ராணி தனது மருமகன் பார்த்தா ரஞ்சன் சர்காவை சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பெரும்பாலும் ஒரே கட்சியில் நின்று அடுத்தடுத்து அரசியல் செய்வதை பார்த்துள்ளோம். சில சமயத்தில் அப்பா ஒரு கட்சி, மகள் ஒரு கட்சியை சார்ந்தவர்களாக இருந்து போட்டியிடுவதை பார்த்திருப்போம். ஆனால் திரிபுராவில் ஒரே தொகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வெவ்வேறு கட்சியில் இருந்து போட்டியிட்டுள்ளனர்.
இடதுசாரி-காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ரஞ்சன் சர்க்கார் குடும்பத்தில் இருந்து மூன்றாவது நபரும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டார். ஆனால் இறுதியாக, கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டதால் அவர் தேர்த்தலில் இருந்து விலகினார். இல்லையேல் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் ஒரே தொகுதியில் களம் கண்டு போட்டியிட்டிருப்பர்.
திலீப் சர்க்கார் என்ற பா.ஜ.க. மூத்தத் தலைவர் பதர்காட் தொகுதியின் நாயகனாக இருந்து வந்தார். முன்னதாக காங்கிரஸில் இருந்த திலீப் சர்க்கார், 2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். சுதீப் ராய் பர்மன் தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர்.
2019 இல் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அதன் பின்னர் அவரது பதர்காட் தொகுதி நிரப்பபடாமல் இருந்தது. அதை அடுத்து அவரது உறவினரான பார்த்த ரஞ்சன் சர்க்கார் மற்றும் அவரது தந்தையின் சகோதரியான மீனா ராணி சர்க்கார் அந்த இடத்திற்கு போட்டி போட்டுள்ளனர்.
மீனா ராணி சர்க்கார் இறுதிச் சுற்றில் ரஞ்சன் சர்க்காரை 1289 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மீனா 27,427 வாக்குகளையும், பார்த்தா 26,138 வாக்குகளையும் பெற்றனர். போட்டியாளர்களாக போட்டியிட்ட போதிலும், முடிவு வந்த பிறகு இருவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். மீனா ராணி வெற்றி அடைந்ததில் மகிழ்ச்சி என்று ரஞ்சன் செய்தி வெளியிட்டார்.
இதையும் பாருங்க: கடும் போட்டிக்கு மத்தியில் திரிபுராவில் ஆட்சியை தக்க வைத்த பாஜக.. பிரதமருக்கு முதல்வர் புகழாரம்!
"நாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், எங்கள் குடும்பம் பெரியது என்பதால், அரசியல் தொடர்புகள் வேறுபட்டவை, ஆனால் உறவில் முரண்கள் ஏதும் அல்ல. இது ஒரு தேர்தலாக இருந்தாலும், நாங்கள் சித்தாந்தத்தில் போராடினோம், உறவில் அல்ல - எதிர்காலத்தில், நாங்கள் சேர்ந்து ஒரே கட்சிக்கு கூட வேலை செய்யலாம்.” என்று மீனா ராணி கூறியுள்ளார்.
இடைத்தேர்தலில் மூத்த அரசியல்வாதியான மிமி மஜும்தார் இந்த பகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், மூத்த அரசியல்வாதி என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பெரிய பேரோ, புகழோ இவருக்கு ஏற்படவில்லை. அதனால் மீரா இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் கண்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Election Result, Tripura