Breaking News: முகேஷ் அம்பானிக்கு மிரட்டல்.. மர்ம போன் அழைப்பால் பரபரப்பு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

 • News18 Tamil
 • | August 15, 2022, 12:53 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED A MONTH AGO

  AUTO-REFRESH

  12:34 (IST)

  முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் - மர்ம அழைப்பு 

  ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர் தான் ஒரு தீவிரவாதி எனக் கூறி முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் டிபி மார்க் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளது.

  11:27 (IST)

  வங்கிக்கொள்ளை :  முக்கிய குற்றவாளி கைது

  சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கி கொள்ளைக்கு  மூளையாக செயல்பட்ட முருகன் கைது

  11:12 (IST)

  கனல் கண்ணன் கைது..!

  சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில்  கலந்துக்கொண்ட இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல்கண்ணன் ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார். இந்தப்பேச்சு சர்ச்சையான நிலையில் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இவரது முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் கனல் கண்ணன் தலைமறைவானார். இந்நிலையில் பாண்டிச்சேரியில் தலைமறைவாக இருந்த கனல்கண்ணனை போலீஸார் கைது செய்தனர்.

  9:59 (IST)
  9:54 (IST)

  சுதந்திர தினவிழாவில் விருது பெற்றவர்கள் 

  தகைசால் தமிழர் விருது : நல்லகண்ணு

  டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது : முனைவர் இஞ்ஞாசி முத்து

  துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது : பா.எழிலரசி, நாகப்பட்டினம் 

  உங்கள் தொகுதியில் முதல்வர் விருது : எஸ் லட்சுமி பிரியா


  முதலமைச்சரின் நல் ஆளுமை விருது

  மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான விருதுகள் : மருத்துவர் பா ஜெய்கணேஷ் மூர்த்தி, உதகமண்டலம்

  சிறந்த நிறுவனம் : ரெனே சான்ஸ் அறக்கட்டளை, புதுக்கோட்டை

  சிறந்த சமூகப் பணியாளர்: சு அமுத சாந்தி, மதுரை

  9:43 (IST)

  சுதந்திர தினவிழாவில்  தகைசால் தமிழர் விருது பெற்ற நல்லகண்ணு தனக்கு வழங்கப்பட்ட 10 லட்சத்தோடு கூடுதலாக 5,000 சேர்த்து 10,05,000 ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மேடையிலேயே முதலமைச்சரிடம் வழங்கினார்


  9:40 (IST)

  இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டு தொடர் பங்களிப்பு குறித்து எதிர்கால இளம் சமுதாயம் அறித்து கொள்ளும் வகையில் நவீன தொழிநுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் ஒன்று சென்னையில் அமைக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  9:36 (IST)

   நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றினார். 


  9:29 (IST)


  தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகி இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. பாசனப்பரப்பு அதிகமாகி, விளைச்சல் அதிகமாகி உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பெருகி வரும் மழையும் நல்லாட்சிக்கு நற்றுணையாக இருக்கிறது - சுதந்திர தினவிழாவில் முதல்வர் ஸ்டாலின் உரை

  9:17 (IST)

  விடுதலை முழக்கத்தை எழுப்பிய முதல் மண் தமிழ் மண் - மு.க.ஸ்டாலின்

  சுதந்திர தினவிழாவில் நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை வணங்குகிறேன். விடுதலை முழக்கத்தை எழுப்பிய முதல் மண் தமிழ் மண்.  சிப்பாய் கலகத்திற்கு முன்பே சுதந்திரத்திற்காக போராடியவர்கள் தமிழர்கள்.