ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஏலத்தில் இரு குடும்பங்கள் இடையிலான கவுரவ பிரச்னை - ரூ.510 கோடிக்கு ஏலம் போன மதுபான கடை!

ஏலத்தில் இரு குடும்பங்கள் இடையிலான கவுரவ பிரச்னை - ரூ.510 கோடிக்கு ஏலம் போன மதுபான கடை!

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தியாவின் பல மாநிலங்களில் மது விற்பனை இன்னும் தனியார் வசமே உள்ளது. ராஜஸ்தானில் மது விற்பனையில் தனியாரே ஈடுபட்டு வருகின்றனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

குடிமக்களின் எண்ணிக்கையில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில இருக்கும் நம் நாட்டில் 'குடி'மக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதில் வியப்பில்லை. தமிழகத்தை பொறுத்தவரை மதுவிற்பனை தனியார் வசமே இருந்தது. ஒரு கட்டத்தில் மதுவிற்பனை அரசு கட்டுப்பாட்டிற்கு வந்தது.

அது முதல் தற்போது வரை தமிழகதில் மது விற்பனையை அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனமே செய்துவருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் மது விற்பனை இன்னும் தனியார் வசமே உள்ளது. ராஜஸ்தானில் மது விற்பனையில் தனியாரே ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அம்மாநிலத்தின் ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் மதுபான கடை ஒன்று ரூ.510 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை 11 மணிக்கு ரூ.72 லட்சம் ஆரம்ப விலையில் துவங்கிய இந்த மதுபான கடை ஏலம் நள்ளிரவுக்கும் மேலும் நீடித்து அதிகபட்ச விலையான ரூ.510 கோடிக்கு முடிந்துள்ளது. ஒரு கிராமத்தில் இருக்கும் மதுபான கடை ஒன்று இத்தனை 100 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளதற்கு இரு குடும்பங்களுக்கு இடையிலான கவுரவ பிரச்சனையே காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது. நோஹார் கிராமத்தில் இருக்கும் குறிப்பிட்ட மதுக்கடையின் அடிப்படை விலை ரூ .72 லட்சம் என்றும், கடந்த ஆண்டு லாட்டரி முறையில் ரூ .65 லட்சதிற்கு கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

Also read... ரயில் நிலையத்தில் கழிவறை குழாய் மூலம் குடிநீர் தொட்டியை நிரப்பிய அவலம்... இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்!

இந்த ஆண்டிற்கான மதுபான கடையை எடுத்து நடத்தும் உரிமையை மீண்டும் ஏல முறையில் கொடுக்க மாநில அரசு முடிவு செய்ததை அடுத்து, குறிப்பிட்ட கடை ஏலத்திற்கு வந்த போது தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ரூ.72 லட்சம் சொல்லப்பட்ட ஆரம்ப விலையை இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் எப்படியாவது தாங்கள் அந்த மது கடையை ஏலத்தில் எடுத்து விட வேண்டும் என்ற வெறியில் போட்டி போடு கொண்டு தாறுமாறாக விலையை ஏற்றி கொண்டே வந்துள்ளனர்.

காலை துவங்கிய இவர்களது ஏல போட்டி நள்ளிரவு 2 மணிவரை நீடித்து இந்த பெருந்தொகையில் முடிந்துள்ளது. ஒருவருக்கொருவர் சொந்தமான 2 பெண்கள் இந்த மதுபானக் கடையை இ-ஏலத்தில்(e -auction) போட்டி போட்டு கொண்டு ஏலம் கேட்டனர் என்பது கூடுதல் அதிர்ச்சி. இறுதியில் கிரண் கன்வார் என்பவரே 510 கோடி ரூபாய்க்கு மதுபான கடையை ஏலம் கேட்டு பிரியங்கா கன்வார் என்ற தனது சொந்தகார பெண்ணை முந்தியுள்ளார்.

கடையின் அடிப்படை விலையான ரூ .72 லட்சத்தை விட 708 மடங்கு அதிகமாக குறிப்பிட்ட மதுபான கடை ஏலம் எடுக்கப்பட்டு உள்ளதை மாநில அரசு மற்றும் கலால் துறை அதிகாரிகள் எதிர்ப்பார்க்கவில்லை. கலால் துறை விதிகளின்படி, புதிய மதுபான கடை உரிமையாளர் கடையின் ஏல தொகையில் 2 சதவீதத்தை முன்கூட்டியே அதிகாரிகளுக்கு செலுத்த வேண்டும். அப்படி செலுத்தாத பட்சத்தில் இந்த ஏலம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Rajasthan