Home /News /national /

புனித் ராஜ்குமார் மரணம்: இதய பரிசோதனை செய்வோரின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு!

புனித் ராஜ்குமார் மரணம்: இதய பரிசோதனை செய்வோரின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு!

இதய பரிசோதனை

இதய பரிசோதனை

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மறைவை தொடர்ந்து இளைஞர்கள் உட்பட பலரிடமும் இதய பரிசோதனை (Cardiac Tests) செய்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் இதய பரிசோதனை செய்துகொள்வோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக கடந்த வாரம் உயிரிழந்த நிலையில்,  இதயம்  தொடர்பான பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாக திகழ்ந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார்.  அவருக்கு கடந்த அக்டோபர் 29ம் தேதி மரடைப்பு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தனர். புனித் ராஜ் குமாரின் மரணம் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    உடல்நலத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்பவர் புனித் ராஜ்குமார். நடனம், உடற்பயிற்சி என எப்போது உடலை ஃபிட்டாக வைத்துகொள்ளும் புனித் ராஜ்குமார் மாரடைப்பு நோயால் இறந்தது மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பின்னர் கர்நாடகாவில் இதய பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    மைசூருவில்  அரசாங்கத்தால் நடத்தப்படும் ஸ்ரீ ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்  (SJICSR) வழக்கமாக நாளொன்றுக்கு 1200 பேர் இதய பரிசோதனை செய்துகொள்ளும் நிலையில், கடந்த திங்களன்று 1600 பேர் இதய பரிசோதனை செய்துள்ளனர். இதய பரிசோதனை செய்துகொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

     

    இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை: லட்சத் தீபம் சாதனைக்கு தயாராகும் அயோத்தி!


    எனினும், புனித் ராஜ்குமாரின் மரணத்தின் விளைவாகவே இது பார்க்கப்படுவதாகவும், இதனையும் தாண்டி தொடர்ச்சியாக இதய பரிசோதனை செய்துகொள்வதே சிறந்தது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    இதேபோல், உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால் புனித் குமார்  உயிர் இழந்தார் என்றும் உடற்பயிற்சி தொடர்பாக தவறான கருத்துகள் பரப்பப்படுவதால் உடற் பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

     

    மேலும் படிக்க: ‘எங்கள் கட்சியில் சேருங்கள்': மோடிக்கு கோரிக்கை வைத்த இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்!


     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Cardiac Arrest, Heart health, Puneet Rajkumar

    அடுத்த செய்தி