ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரயில்வே பாலத்தை தகர்க்க முயற்சி... ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!

ரயில்வே பாலத்தை தகர்க்க முயற்சி... ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!

தகர்க்கப்பட்ட ரயில்வே தண்டவாளம்

தகர்க்கப்பட்ட ரயில்வே தண்டவாளம்

குண்டு வெடிப்பதற்கு 4 மணி நேரம் முன் ரயில் அந்த பாதையில் சென்றுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Rajasthan, India

  ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே விரைவு ரயிலை வெடிகுண்டு வைத்து தகர்க்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  குஜராத் மாநிலம் அசர்வா - ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் இடையேயான விரைவு ரயில் சேவையை கடந்த மாதம் 31-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

  இந்நிலையில், அசர்வா நகரில் இருந்து உதய்பூர் செல்லும் வழியில் கேவ்டா கி நல் என்ற பகுதியில் ரயில் தண்டவாளத்தில் திடீரென குண்டு வெடித்துச் சிதறியது.

  குண்டு வெடிப்பதற்கு 4 மணி நேரம் முன் ரயில் அந்த பாதையில் சென்றுள்ளது. குண்டு வெடித்ததை அடுத்து அந்த வழியே செல்லவிருந்த ரயில் துங்கர்பூர் எனும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

  'அது ஒரு கொலை'.. முதலமைச்சர் வாட்ஸ் அப்க்கு வந்த முக்கிய தகவல்.. வெளிச்சத்துக்கு வந்த சிறுமியின் மரணம்! (news18.com)

  இது முற்றிலும் திட்டமிடப்பட்ட தாக்குதலாக தெரிகிறது என அம்மாநில காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் சூப்பர் 90 வகை டிடோனேட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து ரயில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Bomb blast, Railway, Rajasthan