Home /News /national /

Video : வாகா எல்லையில் வீறுநடை உடன் இந்திய வீரர்கள் கொடி இறக்கும் காட்சிகள்

Video : வாகா எல்லையில் வீறுநடை உடன் இந்திய வீரர்கள் கொடி இறக்கும் காட்சிகள்

வாகா எல்லை

வாகா எல்லை

நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் அட்டாரி - வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அட்டாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது.

    இந்த பகுதியில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இந்த எல்லை பகுதியில் இரு நாடுகளில் படைகளும் அவரவர் நாட்டு தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம்.

    அந்த தேசியக்கொடியை மாலை இறக்கும் நிகழ்வு மிகவும் பிரபலமாகும். இந்திய - பாகிஸ்தான் வீரர்கள் தேசியக்கொடியை இறக்கும் நிகழ்வு உலக அளவில் மிகவும் பிரபலமானதாகும். 75-வது சுதந்திர தினமான இன்று இந்திய வீரர்கள் வீறுநடை போட்டு தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலகலமாக நடைபெற்று வருகிறது.

     

    இந்த நிகழ்வினை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து இந்திய வீரர்களுக்கு உற்சாகம் அளித்து வருகின்றனர். ஜெய்ஹிந்த என்ற முழக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு மக்கள் உற்சாக குரல் எழுப்புகின்றனர்.+
    Published by:Vijay R
    First published:

    Tags: Independence day

    அடுத்த செய்தி