திருப்பதியில் சந்திரபாபு நாயுடு மீது கல்வீசி தாக்குதல் : சாலையில் அமர்ந்து போராட்டம்

திருப்பதியில் சந்திரபாபு நாயுடு மீது கல்வீசி தாக்குதல் : சாலையில் அமர்ந்து போராட்டம்

சந்திரபாபு நாயுடு

ஆந்திரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திருப்பதி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

  • Share this:

    திருப்பதி நாடாளுமன்ற தொகுதியில் வரும் 17ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பனபாக லட்சுமியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று மாலை திருப்பதி ரயில் நிலையம் பகுதிக்கு வந்தார்.

    அங்கு, அவர் தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தில் நடந்து சென்ற சந்திரபாபு நாயுடு மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது சந்திபாபுநாயுடு கீழே குனிந்து கல்வீச்சில் இருந்து தப்பித்தார். இந்த கல்வீச்சில் தொண்டர் ஒருவர் காயம் அடைந்தார்.

    இதனால், சந்திரபாபு நாயுடு தனது கட்சியினருடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். எனவே அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Must Read :  வருமான வரி தாக்கலில் 5 புதிய மாற்றங்கள் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

    இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து, சமசர பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால், சந்திரபாபு நாயுடு மற்றும் கட்சியினர் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Published by:Suresh V
    First published: